திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான 38வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை பெற்ற தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்புப் படை எண் 1 அலுவலகத்தில் பாராட்டு விழா
28.09.24 சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி. ராஜூ தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் நடராஜ் , லாசர், ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
ஈரோட்டில் 19.09.24 யிலிருந்து 21.09.24 வரை நடந்த மாநில அளவிலான 38வது ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 போட்டிகளில் திருச்சி மாவட்டம் சார்பில் 136 பேர் கலந்து கொண்டார்கள். இதில் 14 பேர் பல பிரிவுகளில் பதக்கங்கள் பெற்றார்கள்.
ஒட்டு மொத்த சாம்பியன் மாநில அளவில் 5 வது இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டத்திற்கு கோப்பை பெற்றார்கள் .
வெற்றி பெற்றவருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பாக திருச்சி மாவட்ட தடகள சங்க உபத்தலைவரும், தமிழ்நாடு சிறப்புப்படை காவல் பட்டாலியன்-1 கமாண்டன்ட் எம்.ஆனந்தன், நினைவு வழங்கி பாராட்டினார் .
நிகழ்ச்சியிற்கு தடகள சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், லட்சுமணன், ஜீவானந்தம், தடகள வீரர்களின் பெற்றோர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
D.ராஜு
மாவட்ட செயலாளர்,
திருச்சி மாவட்ட தடகள சங்கம்
9965473330