அங்குசம் பார்வையில் ‘ ஜப்பான் ‘ தயாரிப்பு: எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘ ஜப்பான் ‘
தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு. டைரக்டர்: ராஜு முருகன். ஆர்ட்டிஸ்ட்: கார்த்தி, அனு இமானுவேல், வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன். ஒளிப்பதிவு: எஸ்.ரவிவர்மன், இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டிங்: பிலோமின் ராஜ். பிஆர்ஓ: ஜான்சன்.
கதையைப் பற்றியோ, காட்சிகளைப் பற்றியோ விமர்சிக்க ஆரம்பித்தால் மொத்தப் படமும் செத்த படமாகிவிடும். கார்த்திக்கு இந்த 25–ஆவது படம் இடியாய் இறங்கிவிட்டது என்பது தான் உண்மை. சூர்யா -கார்த்தி சகோதரர்கள் நிஜ வாழ்க்கையில் அறம் சார்ந்தும் மனிதம் சார்ந்தும் இயங்குவதால் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் இயக்குனர் ராஜு முருகனுக்கு என்னாச்சு?!ஏதாச்சுன்னு?!புரியல.
இதற்கு முந்தைய அவரின் மூன்று சினிமாக்கள் தயாரிப்பாளர்களுக்கு தனலாபத்தை கொடுக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக, கருத்தியல் ரீதியாக ராஜு முருகன் என்ற தனி நபருக்கு லாபமாக, லாவகமாக அமைந்தன. அப்படி அமைந்ததை அவர் உறுதியாகப் பிடித்துக் கொள்ள தடுமாறியதன் விளைவு தான் இந்த ‘ஜப்பான்’.
ராஜு முருகன் இந்தப் படத்தில் எழுதிய வசனத்தின் பாணியிலேயே சொல்லப் போனால் ” இரண்டாம் உலகப் போரினால் கடுமையான குண்டு வீச்சில் சிதைந்த ஜப்பான் இன்று பொருளாதாரத்திலும் டெக்னாலஜியிலும் வலுவான நிலையில் உயர்ந்து நிற்கிறது. ஆனால் ராஜு முருகன் படைத்த ‘ஜப்பான்’ எத்தியோப்பியா, சோமாலியா குழந்தைகள் மாதிரி எலும்பும் தோலுமாக நிற்கிறது. –
– மதுரை மாறன்