அங்குசம் பார்வையில் ‘ஜின் – தி பெட்’ [ Jinn The Pet] 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு & டைரக்‌ஷன் : ’ஃபேரி டேல் பிக்சர்ஸ்’ டி.ஆர்.பாலா. ஆர்டிஸ்ட்ஸ் : முகேன் ராவ், பவ்யா ட்ரிகா, ராதாரவி, வினோதினி வைத்தியநாதன், வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, பாலசரவணன், நிழல்கள் ரவி, ரித்விக். ஒளிப்பதிவு : அர்ஜுன்ராஜா, இசை: விவேக்—மெர்வின், ஆர்ட் டைரக்டர் : தினேஷ்குமார், எடிட்டிங் : தீபக், ஸ்டண்ட் : பிரதீப் தினேஷ், காஸ்ட்யூம் டிசைனர்: தீப்தி. பி.ஆர்.ஓ. : நிகில்முருகன்.

மலேசியாவில் ஐந்து வருடம் வேலை ஒப்பந்தம் முடிந்ததும் சென்னைக்குத் திரும்புகிறார் முகேன்ராவ். கிளம்புவதற்கு முன்பு மலேசியாவில் உள்ள பழமையான பொருட்கள் விற்கும் கடையில் வித்தியாசமான அலங்காரப் பெட்டி ஒன்றை வாங்குகிறார். அந்தப் பெட்டியில் இருப்பது தான் ‘ஜின்’ என்ற வளர்ப்பு ஆவியாம். அட இதுகூட டிஃபெரெண்டா இருக்கே. வளர்ப்பு நாய், கிளி, பூனை, மைனா போல இந்தப் பெட்டியில் இருப்பது வளர்ப்பு ஆவியாம். அதுவும் நல்ல ஆவியாம்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

ஜின் – தி பெட்இந்த ஆவியின் மீது வெயில் படக்கூடாது, தண்ணீர் படக்கூடாது. நைட்டு 12 மணிக்கு பிஸ்கட்டும் பாலும் தான் சாப்பிடுமாம் இந்த ஜின். இதை வளர்ப்பவர்கள் குடும்பம் செழிக்கும், காசு பணம் கொட்டும். அதே நேரம் கொஞ்சம் ஏடாகூடமா நடந்துக்கிட்டா வெறி கொண்டு வெளியே வந்து ஆட்டிப்படைக்கும். இதையெல்லாம் அந்தக் கடையில் இருக்கும் குள்ள மனிதர் சொல்வதைக் கேட்டதும் ஒரு ஃபுல் பாட்டில் ஜின்னை தண்ணி கலக்காம அடிச்ச மாதிரி ஆகிப்போச்சு.

ஆனால்  ஜின் வந்ததும் முகேன் வீட்டில் வரிசையாக சில கெட்ட சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் டென்ஷனாகும் முகேனின் பாட்டி வடிவுக்கரசி, இந்தச் சனியனை வெளியே தூக்கிப் போடு என கத்துகிறார். முகேனும் ரோட்டில் வீசுகிறார். இதன் பின் முகேனின் காதல் மனைவி பவ்யா வீட்டில் ரத்தச் சகதியில் கிடக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ஜின் – தி பெட்இப்படியே ஏனோதானோவென இடைவேளை வரை போகிறது ‘ஜின்’ கதை. இடைவேளைக்குப் பிறகு, அதுவும் அந்த நல்ல ஆவி ‘ஜின்’ பெட்டியிலிருந்து வெளியே வந்த பிறகு, கதையும் கொஞ்சம் ஸ்பீட் பிடிக்குது. முகேனின் வீட்டில் எல்லாமே நல்லதா நடக்குது.

பவ்யாவைப் போட்டுத்தள்ள ராதாரவி  ப்ளான் போட்டது ஏன்? என்பதற்கு நம்பும்படியான ஃப்ளாஷ்பேக் இருக்கு. அதுவும் நல்ல உயரமான கருப்புக் கலர் ரோபோ போல டிசைன் பண்ணப்பட்ட  ‘ஜின்’ போடும் ப்ளான் கலகலப்பாகவும் இருக்கு. அதற்கு டப்பிங் வாய்ஸ் செம காமெடியா மேட்ச் ஆகியிருக்கு. ஜெய்சங்கர் நடித்த ‘பட்டணத்தில் பூதம்’ தான் இந்த டிஜிட்டல் சினிமாவில் ஜின்னாக வந்திருக்கு.

ஜின் – தி பெட்முகேனின் காதல் மனைவி பவ்யா ட்ரிகாவுக்கு சாந்தமான முகம். நடிப்பும் ஓகே ரகம். முகேனின் அப்பாவாக இமான் அண்ணாச்சி, அக்காவாக வினோதினி வைத்தியநாதன், நண்பனாக வந்து கலகலப்புக்கு க்யாரண்டி தரும் பாலசரவணன் என ‘ஜின்னுக்குள்’கரெக்டா  மிக்ஸிங் ஆகியிருக்கிறார்கள்.

 

 —     மதுரை மாறன். 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.