இன்னர்வீல் சங்கம் நடத்திய கூட்டுத் திருமண விழா !
பன்னாட்டு ரோட்டரி சங்கத்தின் குடும்ப உறுப்பினர்களை அங்கத்தினராக கொண்டு பன்னாட்டு அளவில் இயங்கிவரும் பெண்கள் சங்கமான இன்னர்வீல் சங்கம் (Inner Wheel Club) .
இதன் ஓர் அங்கமான திருச்சி மலைக்கோட்டை இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் ஐந்து தம்பதிகளுக்கு கூட்டுத் திருமணத்தை நடத்தியுள்ளனர். செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் நடைபெற்ற இத்திருமண விழாவில், இன்னர்வீல் சங்க உறுப்பினர்களும், மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் பங்குபெற்று மணமக்களை வாழ்த்தினர்.
அறுசுவைவிருந்துடன் விழா இனிதே நிறைவேறியது. பின்னர் 4 கர்ப்பிணி பெண்களுக்கு சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்கள் வளைகாப்பு விழாவும் நடத்தினார்கள். உறவினர்களும் நண்பர்களும் வளையல் அணிவித்து வாழ்த்தினார்கள்.