கண்ணாடிக்கு டாட்டா சொல்லுங்க… ஜோசப் கண் மருத்துவமனையில் அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சை !
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை டாக்டர் பிரக்யா பார்மர் கூறும் போது, லேசர் பார்வை திருத்தம் என்பது கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ் மீதான சார்பு நிலையை அதற்றுவதற்கான சிறந்த வழி உங்கள் கார்னியாவில் வடிவம், கண் சக்திக்கு காரணம், பார்க்கும் ஒரு பொருளின் ஒளி, உங்கள் கண்ணுக்குள் குவிந்து கிடக்கும் புள்ளியை பொறுத்து. மாயோப்பிய(கிட்ட பார்வை ), ஹைபேரொப்பியா (தூரப்பார்வை), அஸ்டிக மாட்டிசம் (கரு விழியின் முறையற்ற வளைவு குறைபாடு) ஆக இருக்கலாம்.

லேசர் பார்வை திருத்த அறுவை சிகிச்சையின் போது உங்கள் கார்னியாவின் வடிவம் கண்ணுக்குள் நுழையும் ஒளி சரியான இடத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழித்திரையில் மாற்றிக் கொள்ளப்படுகிறது. இது ஒரு எளிய செயல்முறை சிகிச்சை. இதனை 15 முதல் 20 நிமிடத்திற்குள் செய்துவிடலாம். மேலும் ஓரிரு நாட்களில் உங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர முடியும்.
லேசர் பார்வை திருத்தம் கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. லேசிக் என்பது மிகவும் பிரபலமான ஒளி விளைவுகள் கொண்ட பிழை திருத்த சிகிச்சை ஆகும். இது கிட்ட பார்வைக்கு நோய்களுக்கு மயோப்பிய ID முதல -9D வரை ஹைபேரொப்பிய +4D வரை மற்றும் அஸ்டிகமாட்டிசம் 3D வரையிலான ஆற்றலை சரி செய்யும்.

கருவிழி மூலம் ஒளி விளக்குகள் அறுவை சிகிச்சை முறைகளை பற்றி பார்ப்போம்.
PRK- PHOTO REFRACTIVE KERATECTOMY
LASIK LASER ASSISTED INSITU KERATOMILUSIS
SMILE SMALL INCISION LENTICULE EXTRACTION
PRK கரு விழியின் முதல் அடுக்கான எபித்திலி எனும் பிரித்து இரண்டாம் அடுக்கில் எக்ஸ் சைமர் லேசர் மூலம் திசுக்களை நீக்கப்பட்டு பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது. LASIK லேசர் மூலம் கத்தியின்றி வழி இன்றி முதல் இரண்டு அடுக்குகளை பிரித்து மூன்றாவது அடுக்கில் எக்ஸாமினர் லேசர் கொடுத்து பார்வை குறைபாடுகளை சரி செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் விரைவாக குணமடைய முடியும்.
இந்த அறுவை சிகிச்சையை யார் செய்து கொள்ளலாம்?
18 வயது முதல் 40 வயது வரை அடைந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். முக்கியமாக முன் லேசிக் சோதனைகள் கருவில் தடிமன் மற்றும் வடிவம் தெரிந்து கொள்ளப்பட்டு சிகிச்சை முறையை தீர்மானிக்கப்படுகிறது. லேசர் அறுவை சிகிச்சைக்கு பிறகு கண்ணில் நீர் வடிதல் மற்றும் லேசான உறுத்தல் இருக்கும். இது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். கைகளை அடிக்கடி கண்கள் அருகில் எடுத்துச் செல்லக்கூடாது. முக்கியமாக கண்களை தேய்க்க கூடாது. எந்த ஒரு பக்க விளைவும் இன்றி, நமது ஜோசப் கண் மருத்துவமனை திருச்சியில் கடந்த 40 வருடங் களாக மிகச்சிறந்த மருத்துவர் கொண்டு மிகவும் குறைந்த செலவில் சிகிச்சை அளித்து வருகிறோம். எனவே மக்களாகிய அனைவரும் ஜோசப் கண் மருத்துவமனையை நாடி கண்ணாடி இனி தேவையில்லை என்று லேசிக் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
இது குறித்து ஒருவர் டாக்டரிடம் கேட்ட போது அவர்கள் கூறிய பதிலை பார்ப்போம்
கேள்வி: இயல்பான வாழ்விற்கு எப்போது திரும்புவது?
பதில்: மூன்று நாட்களில்
கேள்வி: 40 வயதிற்கு மேல் லேசிக் பண்ணலாமா?
பதில்: பண்ணலாம் ஆனால் வெள்ளை எழுத்துக்கள் கண்ணாடி கிட்ட பார்வை அணிய வேண்டும்.
கேள்வி: கண்புரை உள்ளவர்கள் லேசிக் செய்யலாமா?
தேவை படாது கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தால் போதும். அந்த லென்ஸில் கண்ணாடி பார்வையை சரி செய்து விடலாம்.
கேள்வி: கண் மை அல்லது கண் இமைகள் (eye-lases) போடலாமா?
பதில்: மூன்று மாதத்திற்கு தவிர்ப்பது நல்லது.
கேள்வி: எவ்வளவு நாட்கள் மருந்து போட வேண்டும்?
லேசிக் அறுவை சிகிச்சை செய்தவருக்கு கண்ணில் வறட்சி அதிகமாக இருக்கும் மூன்று மாதத்திற்கு கண் மருந்து அவசியம் போட வேண்டும். இந்த மருந்துகளை பக்க விளைவுகளை எதுவும் இல்லை. அதனால் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
கேள்வி: உடற்பயிற்சி செய்யலாமா?
பதில்: ஒரு வாரத்திற்கு பிறகு செய்யலாம். கண்ணில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: உணவு வகைகள் மாற்றம் செய்ய வேண்டுமா?
பதில்: பத்திய உணவு எதுவும் தேவையில்லை. எல்லா வகைகளும் எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: எப்பொழுது இருந்து செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பார்க்கலாம்?
பதில்: இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு டாக்டர்கள் தெளிவாக பதிலளித்தனர்.