அங்குசம் பார்வையில் ‘ஜோஷ்வா– இமை போல் காக்க’ படம் எப்ப இருக்கு !

0

அங்குசம் பார்வையில் ‘ஜோஷ்வா– இமை போல் காக்க’ தயாரிப்பு: ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ‘ ஐசரி கணேஷ். டைரக்டர்: கெளதம் வாசுதேவ் மேனன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: வருண், ராஹீ, கிருஷ்ணா, திவ்யதர்ஷினி (டிடி) நீலகண்டன், கிட்டி, மன்சூர் அலிகான், விசித்ரா டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர், ஸ்டண்ட் மாஸ்டர்கள்: யானிக் பென், தினேஷ் சுப்பராயன், இசை: கார்த்திக், ஆர்ட் டைரக்டர்: குமார் கங்கப்பன், எடிட்டிங்: ஆண்டனி, காஸ்ட்யூம்: உத்தாரா. பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா.

நல்ல ஓங்குதாங்கா, வாட்டசாட்டமா ‘காண்ட்ராக்ட் கில்லர்’ கேரக்டருக்கு செம ஃபிட்டாக இருக்கிறார் ஹீரோ வருண். லவ் ஃபீலிங்கையும் நன்றாகத் தான் வெளிப்படுத்துகிறார். ஆனால் அந்த கேரக்டரின் டிராவல் ஆக்‌ஷன் பிளாக்கை நோக்கி மட்டும் நகர்வதால், லவ் போர்ஷனுக்கு அவ்வளவாக வேலை இல்லை. படத்தில் எப்படியும் பத்துக்கும் மேற்பட்ட ஸ்டண்ட்களை பக்காவாக கம்போஸ் பண்ணியிருக்கிறார்கள் யானிக் பென்னும் தினேஷ் சுப்பராயனும். அதிலும் அந்த ஸ்டார் ஓட்டல் மாடிப்படிகள், மற்றும் பேஸ்மெண்ட்டில் நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் அபாரம்.

Joshua: Imai Pol Kaka
Joshua: Imai Pol Kaka

ஹீரோயின் ராஹீக்கு இதில் நன்றாகவே வேலை கொடுத்து, வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர் . அதிலும் பல சீன்களில் டைட் குளோசப்பில் ராஹீயின் ஃபேஸ் எக்ஸ்பிரஸன் பாஸ்மார்க் வாங்கியுள்ளது. டிடி நீலகண்டனுக்கு நல்ல ஸ்கோப்பும் சான்ஸும் இருக்கு. ஹீரோ கிருஷ்ணாவுக்கு வில்லன் வேடம் செட்டாகிவிட்டது. மன்சூரலிகானுக்கும் விசித்ராவுக்கும் ஒன்லி ஒன் சீன் மட்டும் தான். இன் திஸ் பிலிம், மியூசிக் டைரக்டர் கார்த்திக்கும் கேமராமேன் கதிரும் இமை போல் சேஃப்பாக இருக்கிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

என்னங்க ஒரே இங்கிலீஷ் வார்த்தையா போட்டு எழுதிறீகன்னு நீங்க நினைக்கிறது எனக்கும் கேட்கத்தான் செய்யுது. என்ன பண்றது, கேரக்டர்களுக்கு மாதவி, குந்தவைன்னு பேர் வைக்க முடிந்த டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தமிழில் வசனம் எழுதத் தெரியாது போல. இல்ல இங்கிலீஷல எழுதுனாத்தான் கெளரவம்னு கெளதம் நினைச்சுட்டாரு போல.

சென்னை ஏர்போர்ட்டில் பத்துபதினைந்து பேர் கத்தி, கபடா, துப்பாக்கியுடன்  ஹீரோவை வளைக்கிறார்கள். அம்புட்டுப் பேரையும் சதக் சதக்கென குத்துகிறார், டப்பு டப்புன்னு சுட்டுத் தள்ளுகிறார் ஹீரோ. அப்புறம் நடுரோட்டில் ஜீப்பைக் கவிழ்த்துப் போட்டு மல்லுக்கட்டுகிறார்கள். ஸ்டார் ஓட்டலில் சண்டியர்த்தனம் பண்ணுகிறார்கள். பங்களாவுக்குள் டுமீல் டுமீல் என சுடுகிறார்கள், ஏழெட்டுப் பொணத்தை வேனில் அள்ளிப்போட்டுக் கிளம்புகிறார்கள். ஆனால் போலீஸ் என்கிற வஸ்து படத்தில் இல்லவே இல்லை. ஏப்பு கெளதம் வாசுதேவ் மேனன், தமிழ்நாடு என்ன இவ்வளவு கேவலமாவா தெரியுது உங்களுக்கு? சரி,ஹீரோயின் ராஹீயாவது நியூயார்க் போய், அந்த மாஃபியா கேஸில் ஆஜராவார்னு பார்த்தா அதுவும் இல்லை. சென்னை ஏர்போர்ட் பேக்ரவுண்ட்ல, ராஹீயை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு, “நான் இருக்கேன்..நான் பார்த்துக்குறேன்” என்கிறார் ஜோஷ்வா என்ற வருண்.

இது தான் இமை போல் காக்க…

–மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.