தொல்மாந்தரைத் தேடிப் பயணம் ! நூல் அறிமுகம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

இனிய ரமலான் வாழ்த்துகள்

ஆப்பிரிகாவில்தான் முதல் மாந்த இனம் தோன்றியது” – படைப்பாளர் பால பாரதி உரை

அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 22.08.2025ஆம் நாள் நடைபெற்ற நூலரங்கம் நிகழ்வில் தொல்மாந்தரைத் தேடிப் பயணம் என்னும் நூலை படைத்த படைப்பாளி பால பாரதி நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் படைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

படைப்பாளர் பால பாரதி

தொல் மாந்தரைத் தேடிப் பயணம் என்னும் நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய நூலின் படைப்பாளர் பால பாரதி உரையாற்றும்போது,“இந்த நூல் உருவாக அடிப்படைக் காரணம் என்னுடைய தேடுதல் பயணம்தான். பயணங்களில் என் மகன் கேட்ட கேள்விகள்தான் என்னை நூல் எழுதத் தூண்டியது. இந்த நூலை எழுதுவதற்குத் தொல் மாந்தர் குறித்த பல நூல்களையும், கட்டுரைகளையும் படித்தேன். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொல் மாந்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வுகள் செய்தேன். அங்குக் கிடைத்த தகவல்களை ஒருங்கிணைத்து இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.

யாவரும் கேளீர்இந்த நூலில் 5 இயல்களில் தொல் மாந்தர் குறித்த செய்திகளைக் கூறியுள்ளேன். அவை, 1. தொல்மாந்தரைத் தேடி – குடியம் 2. தொல்மாந்தரைத் தேடி – அத்திரப்பாக்கம் 3. மனித மூதாதையர் – மீள்பார்வை 4. தொல்மாந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி, 5. இராபர்ட் புரூஸ் ஃபுட் கல்லறை – ஏற்காடு என்பதாகும்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டததில் அல்லி குல்லி மலைத் தொடரிலும் அதன் அருகேயுள்ள சமவெளிகளிலும் தொல்மாந்தர் வாழ்ந்த புகழ்பெற்ற குடியம் குகைகளையும், அவர்கள் விட்டுச் சென்ற கல் ஆயுதங்களையும் காண்பதற்காக என் மகனுடன் சென்றேன். பயணத்தில் என் மகன் என்னிடம்,“மனித மூதாதையாரா? அப்ப மனிதன் வேறு, மனித மூதாதையர் வேறா?”கேட்டான். “ஆமாம், தற்கால மனிதன் அதாவது நாம் ஹோமோ சேப்பியன் என்ற வகையினத்தைச் சேரந்தவர்கள்.

மனித இனம் இப் பூமியில் தோன்றுவதற்கு முன் வேறு பல முன்னோடி இனங்கள் இப் பூமியில் தோன்றி மறைந்துள்ளன. மனிதனைப் போலத் தோற்றமளித்தாலும் உடல் அமைப்பில் சில குறிப்பிட்ட வேறுபாடுகளைக் கொண்ட இத்தகைய இனங்களைத்தான் மனித மூதாதையர் என்கிறோம்” என்ற பதில் அளித்தேன். திருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கம் போய் அங்கிருந்து குடியம் குகைகளுக்குச் சென்றோம். உள்ளூரில் உள்ளவர்களின் உதவியோடு எங்களை அழைத்துச் சென்றார்கள்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

படைப்பாளர் பால பாரதி
படைப்பாளர் பால பாரதி

அங்கு 14 குகைகள் உள்ளன. இரண்டு குகைகளுக்கு மட்டுமே செல்ல வழி இருந்தது. அந்தப் பெரிய குகையைப் பார்த்தபோது ஒரே திகைப்பு. இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் மனித மூதாதையர் நம்மை வரவேற்பதுபோல் தோன்றியது. குகையில் சிறிதும் பெரிதுமாக உருண்டையான கற்கள் பார்ப்பதற்கு மனித மண்டை ஓடுகள் போல் காட்சியளிக்கின்றன. மூதாதையர்கள் இந்தக் குகைகளில் தங்கியபடி காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்துள்ளனர்.

சமவெளிப் பகுதிகளிலும் இவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் நிறைய கிடைத்தன. மூதாதையர் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர் என்பதையும் அறியமுடிந்தது. 1962-64ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறை இந்த இடத்தை அகழாய்வு செய்துள்ளது. கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், வெட்டுக் கத்திகள் போன்ற கற்கருவிகள் கிடைத்துள்ளன. இந்தப் பகுதியில் மண்ணாச்சி அம்மன் என்ற பெண் தெய்வம் உள்ளது. எல்லா பழங்குடி மக்களிடம் பெண் தெய்வ வழிபாடு உள்ளது. இதை குடியத்திலும் காண முடிந்தது.

அத்திரப்பாக்கம் பயணம் மேற்கொண்டேன். அத்திரப்பாக்கம் புகழ்பெற்ற பழைய கற்காலத் தடயங்களைக் கொண்டதாகத் திகழ்கிறது. 1863இல் இராபர்ட் புரூஸ் ஃபுடட் முதலில் இங்கு கைக்கோடாரிகளைக் கண்டுபிடித்தார். பின்னர் வி.டி.கிருஷ்ணசாமி, போட்டர்ஸன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பழைக கற்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக அத்திரப்பாக்கம் விளங்கியது. இங்கு நான்கு மண்ணடுக்குகள் உள்ளதையும், சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்களைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விலங்குகளின் தொல்லுயிர்ப் படிமங்களான எருமை, கொம்புகளற்ற மான், குதிரை போன்றவற்றின் பற்கள் இங்கே கிடைத்துள்ளன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலகில் முதலில் தோன்றிய மனிதர்கள் கருப்பாகத்தான் இருக்கக் காரணம், அவர்களின் தோலில் உள்ள மெலனின என்ற வேதிப் பொருள் சூரியனிலிருந்த வரும் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்துத் தோல் பாதுகாக்கிறது. நிலநடுகோட்டை அமைந்துள்ள நாடுகளில் சூரியக் கதிர் செங்குத்தாக விழுவதால் இப் பகுதியில் உள்ள மக்கள் கருப்பாக இருப்பார்கள். நம் ஊரில் உள்ள கரடி கருப்பாக இருக்கும். துருவக்கரடிகள் வெள்ளையாக இருக்கும். இதற்கும் காரணம் ஒன்றே. ஆப்பிரிக்காவிலிருந்து மனிதக் கூட்டங்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்தன. ஒரு கூட்டத்தினர சைபீரியாவை அடைந்தனர். 15,000 – 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பெரிங் நிலப்பாலம் வழியே அமெரிக்காவை அடைந்தனர்.

தொல்பழங்காலத்திற்காக வைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகம் பூண்டியில் உள்ளது. இதற்குத் தொல்மாந்தர் அகழ்வைப்பகம் என்ற பெயர் வைத்துள்ளனர். தொல்லுயிர்களின் படிமங்கள், மரப்படிமங்கள், கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள், ஈமப்பேழைகள், மண்பானைகள், நுண்கற்காலக் கருவிகள் ஆகியவை அவற்றிற்குரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன, 2004ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை 3,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட 160 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும் அவர்களின் நம்பிக்கைகள் ஒன்றாக இருப்பது வியப்பாகவே உள்ளது.

இந்தியாவின் தொல்பழங்காலத்தைப் பற்றிப் படிக்க விரும்புகிறவர்கள் முதலில் இராபர்ட் புரூஸ் ஃபுட் பற்றியும் அவர் கண்டுபிடிப்புகளைப் பற்றியும் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். 1834ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நிலவியல் கழகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் இந்தியா வந்தார். பல்லாவரம் அடுத்துள்ள திரிசூலம் பகுதியில் 1863ஆம் ஆண்டு பழங்கால கற்கருவியைக் கண்டெடுத்தார். அதுதான் தற்போது பூண்டி அகழ்வைப்பகத்தில் உள்ளது. தொல்மாந்தாரைத் தேடியப் பயணம் இதிலிருந்துதான் தொடங்கியது. பின்னர் ஃபுட் இறந்தபின்னர் அவர் உடல் புதைக்கப்பட்ட கல்லறை ஏற்காட்டில் உள்ளது. அந்த இடத்தையும் பார்வையிட்டேன். இவரின் கல்லறையை அடுத்து மகள், ஃபுட்டின் மாமனார், மனைவியின் கல்லறைகள் உள்ளன” என்று உரையை நிறைவு செய்தார்.

பார்வையாளர்கள் படைப்பாளருடன் கலந்துரையாடல் மூலம் கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பினர். லெமூரியா கண்டம் குறித்த கேள்விக்கு, லெமூரியா பற்றிய ஆய்வுகள் இன்னும் அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்படவில்லை என்று படைப்பாளர் பதில் அளித்தார். பேராசிரியர் ரெ.நல்லமுத்து நிகழ்வின் இறுதியில் நன்றி கூறினார். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளர் தி.அன்பழகன் படைப்பாளருக்கு நூல்களைப் பரிசாக வழங்கினார். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜேடிஆர் படைப்பாளருக்குப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.