அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெற்ற தேர்தல் !

காலப் பெட்டகம்-16

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

தமிழ்நாட்டின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தல் 2021 ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னும் இருபெரும் ஆளுமைகள் இல்லாமல், நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டு ஆட்சி அமைத்தார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட உதயநிதி சில ஆண்டுகளுக்குப் பின் அமைச்சராக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து துணை முதல் அமைச்சர் என்ற பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அதிமுகவைச் சார்ந்த உதயக்குமார் நியமிக்கப்பட்டார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்த சட்டமன்றத்தின் இறுதியில் பாமகவில் பிளவு ஏற்பட்டு இராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு அணிகள் இயங்கின. இராமதாஸ்அணியில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் அன்புமணி தலைமையில் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 15ஆவது சட்டமன்றத்தின் பதவிக் காலம் மே 3ஆம் நாள் முடிவடைந்தது. இதற்கு முன் தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த பிறகும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக + பாஜக கூட்டணியின் உறவு தொடர்ந்தது. கூட்டணியில் இருந்த தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, அமமுகவோடு கூட்டணி அமைத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. மேலும், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பசும்பொன் தேசியக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி போன்ற சிறிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

திமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தேர்தலில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ, மமக போன்ற கட்சிகள் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, முன்னாள் ஆட்சித் தலைவர் உ.சகாயம் தலைமையில் அமைந்த சகாயம் அரசியல் பேரவை போன்ற கட்சிகள் தனித்து போட்டியிட்டன.  2019 மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற திமுக கூட்டணி தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்றன.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2021 சட்டமன்றத் தேர்தல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

திமுக கூட்டணி – 45.38%

அதிமுக கூட்டணி – 39.72%

நாம் தமிழர் கட்சி – 6.58%

அமமுக – 2.79

அதிமுக 66 இடங்களில் வெற்றிபெற்று வலுவான எதிர்க்கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. சுமார் 25 இடங்களில் அதிமுகவின் வெற்றி அமமுக பெற்ற வாக்குகளால் தடுக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 மே 7ஆம் நாள் தமிழ்நாட்டின் 12ஆவது முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் “மு.க.ஸ்டாலின் என்னும் நான் என்பதற்குப் பதிலாக, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” என்று சொல்லி அமைதியாக அவையை நிமிர்ந்து பார்த்தார் என்பது வரலாறு.

(காலப் பெட்டகத்தில் தமிழ்நாடு தேர்தல் வரலாறு இத்துடன் நிறைவு பெறுகின்றது)

—   ஆதவன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.