அங்குசம் சேனலில் இணைய

கலைமகள் சபா – பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிப்பது எப்படி ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கலைமகள் சபா மோசடி வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது முதலீட்டு தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையின் தொடக்கமாக, அதன் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வதற்கென்று தனி இணையதளத்தை உருவாக்கி அதில் பதிவு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தார், கலைமகள்சபா சங்கத்தின் தனி அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கடந்த 17.05.2025 தேதியிட்டு வெளியான செய்திக்குறிப்பில், கலைமகள் சபா சங்கத்தின் சார்பில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு அந்த சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. அனைத்து கலைமகள் சபா உறுப்பினர்களின் பெயர்கள், உறுப்பினர் எண், அவர்கள் செலுத்திய சந்தா தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 6,50,000 உறுப்பினர்களுடைய விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு அதற்காக தனியாக ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைமகள் சபா உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் செலுத்திய சந்தா தொகை திரும்ப பெறும் வகையில் அவர்கள் (0) என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்தவுடன் அதை  உறுதி செய்யும் விதமாக ஒரு குறுஞ்செய்தி பெறப்படும்.

கலைமகள் சபா மோசடி
கலைமகள் சபா மோசடி

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மேலும், அவர்களுடைய வங்கி கணக்கினை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த தகவல்கள் அனைத்தும் கலைமகள் சபா அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகளுடன் ஒப்பிட்டு பார்த்து தகவல்கள் சரிபார்க்கப்பட்டு செலுத்திய தொகை வங்கிக்க கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.” என்பதாக தெரிவித்திருந்தார்கள்.

இதுதவிர கலைமகள் சபாவின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்,  சங்கத்தின் தனி அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

மேற்படி இணையதளத்தில் உறுப்பினர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கென்று எந்தவிதமான காலக்கெடுவையும் இதுவரை அவர்கள் நிர்ணயிக்கவில்லை. ஆனாலும், அவ்வாறு முதல்முறை பதிவு செய்ய முனையும் பலரும் பல்வேறு விதமான தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

பலருக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற வழிமுறை அறியாதிருக்கிறார்கள். தற்போது அவர்கள் வழங்கியிருக்கும் இணையதள முகவரியிலேயே அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்ற போதிலும், நம்மை அணுகிய கலைமகள் சபா உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? என்ற விவரத்தினை இங்கே தனி வீடியோ பதிவாக வெளியிடுகிறோம்.

  —     அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.