அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலைமகள் சபா : எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள்?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு தெளிவான முடிவை எட்டப்பட முடியாமல் தவித்துவரும் கலைமகள் சபா வழக்கு விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருக்கிறது, உயர்நீதிமன்ற அமர்வு. தமிழகம் முழுவதிலுமுள்ள கலைமகள் சபா தொடர்புடைய சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை உறுதிபடுத்தும் பணியில் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதன்பொருட்டு, தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுகளை நடத்தி வருகிறது, ஆணையம்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் கலைமகள் சபா தொடர்பான சொத்துக்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 31.05.2026 தேதியன்று நிலவரப்படி, தமிழகத்தில் 33 மாவட்டங்களிலும்; பெங்களூரூ, மைசூர், மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களிலும் 3880 பத்திரப்பதிவு ஆவணங்களின்படி, 12,461.06 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

பத்திரப்பதிவு ஆவணங்களின்படி பார்த்தால், திருச்சி மாவட்டம் 755 ஆவணங்களுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது.  674 ஆவணங்களுடன் மதுரை இரண்டாம் இடத்திலும், 496 ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நிலத்தின் பரப்பளவின்படி பார்த்தால், 2476.73 ஏக்கர் நிலங்களுடன் திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்திலும்; 2006.7 ஏக்கர் நிலங்களுடன் திருச்சி மாவட்டம் இரண்டாம் இடத்திலும்; 1698.26 ஏக்கர் நிலங்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இருக்கிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தற்போது கைவைசம் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ள,12,461 ஏக்கர் பரப்பளவு இடங்களிலும்கூட, எத்தனை இடங்கள் சட்டச்சிக்கலில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது; மூன்றாம்நபரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை கண்டறிவதும்; அவற்றின் சிக்கல்களை சட்டரீதியாக தீர்ப்பதும்தான் கலைமகள்சபா ஒரு நபர் ஆணையத்தின் முன்பாக உள்ள பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

கலைமகள்சபா நிர்வாகத்தை தொடர்புகொள்ள :

இணையதளம் : http://kalaimagalsabha.in

மின்னஞ்சல் முகவரி : specialofficerkms2022@gmail.com

தொலைபேசி எண்கள் : 9944098552 / 9944098572

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.