அங்குசம் சேனலில் இணைய

”இப்படிச் சொன்னா வெளங்குமா?” – ’க.க.க.’ விழாவில் சிங்கம்புலி கலாட்டா!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘மங்காத்தா மூவிஸ்’ பேனரில் ரவி தயாரிப்பில் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி தீபாவளிக்கு காமடி சரவெடியாக வரப்போகும் படம் ‘கம்பி கட்டுன கதை. இதில் நட்டி, சிங்கம்புலி, ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, சாம்ஸ் [ எ] ஜாவா சுந்தரேசன், முருகானந்தம், முத்துராமன், முல்லை கோதண்டம்,  இவர்களுடன் இரண்டாவது கதாநாயகனாக முகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜெய் சுரேஷ், இசை : சதீஷ், ஆர்ட் டைரக்டர் : சிவக்குமார், பி.ஆர்.ஓ : ஷேக்

தீபாவளி ரிலீசையொட்டி படத்தின் டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 07-ஆம் தேதி நடந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதில் பேசிய தயாரிப்பாளர் ரவி,

“இந்தப் படம் முழுக்க காமெடி தான், அதுவும் ஒரு சாமியாரைப் பற்றிய காமெடி. அதற்காக லாஜிக் இல்லாத கதைன்னு நினைச்சுர வேண்டாம். இதனுடைய இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு லாஜிக் இருக்கு. மீடியா நண்பர்கள் பேராதரவு தர வேண்டும் என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கம்பி கட்டுன கதைநட்டி, ஹீரோயின்கள் ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கோதண்டம், முத்துராமன், புதுமுக ஹீரோ முகேஷ், படத்தின் இணை இயக்குனரும் வசனகர்த்தாவுமான முருகானந்தம், மியூசிக் டைரக்டர், கேமராமேன் உட்பட எல்லோருமே வழக்கம் போல படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி சொல்லிப் பேசி, மீடியாவின் ஆதரவையும் வேண்டினார்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

நடிகரும் இயக்குனருமான சிங்கம்புலி தான் காமடி கலாட்டாவில் அரங்கையே சிரிப்பில் அதிர வைத்தார்.

“படத்தோட டைரக்டர் என்னிடம் கதை சொல்ற வரைக்கும் தொப்பியைக் கழட்டவேயில்லை. ஒருவேளை நம்மள மாதிரி வழுக்கையா? இல்ல மொட்டைத் தலையான்னு சந்தேகம். ஒருவழியா தொப்பியைக் கழட்டுனதும் அப்பாடா நமக்கு ஒரு ஜோடி கிடைச்சுருச்சுன்னு சந்தோஷப்பட்டேன். தயாரிப்பாளர் ரவி, அமேசான் காட்டுக்குப் போயாவது முடி வளரும் தைலம் வாங்கிட்டு வந்து டைரக்டருக்கு கொடுக்கணும், அப்படியே எனக்கும் ஒண்ணு கொடுங்க.

கம்பி கட்டுன கதைமுருகானந்தம் பேசும் போது படத்தின் சீன், டயலாக் எல்லாமே ஸ்பாட்ல போய் தான் முடிவு பண்ணோம்னு பீத்திக்கிட்டாரு. அப்படியெல்லாம் பேசுனா எவனாவது சான்ஸ் கொடுப்பானா? இல்ல படம் தான் வெளங்குமா? பொய்யாவது அடிச்சுவிடணும்ப்பா. இல்லேன்னா டப்பா டான்ஸ் ஆடிரும். சினிமா என்பது மக்கள் நமக்குத் தரும் மரியாதை, கெளரவம். அதை கடைசி வரை காப்பாத்தணும். இந்த கம்பி கட்டுன கதையில சாமியாரா நடிச்சிருக்கேன். என் பொண்டாட்டி கூட என்கிட்ட, கேரக்டரை எழுதிட்டு உன்னைய கூப்பிடுவாய்ங்களா? இல்ல உன்னை புக் பண்ணிட்டு கேரக்டர எழுதுவாய்ங்களான்னு கேட்டா.

கம்பி கட்டுன கதைஇந்தப் படம் சுமாரா இருந்தாக் கூட சூப்பரா இருக்கு, நல்லா இருக்குன்னு பத்திரிகை நண்பர்கள் பொய்யையாவது எழுதி ஜெயிக்க வைக்கணும்” என தீபாவளி காமெடி சரவெடியை ஆடியோ விழாவிலேயே கொளுத்திப் போட்டார் சிங்கம்புலி.

டைரக்டர் ராஜநாதன் பெரியசாமி, “காமெடி படம் என்றாலும் செம மாஸாகவே எடுத்திருக்கோம். படத்தை வெளியிட முன்வந்துள்ள ஹரி உத்ராவுக்கு மிகவும் நன்றி. நிறைய பேசணும்னு நினைச்சேன், ஆனா முடியல. படத்தின் சக்சஸ் மீட்டில் நிறைய பேசுறேன்”

 

  —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.