அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘கம்பி கட்ன கதை’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : மங்காத்தா மூவிஸ்’ ரவி. டைரக்‌ஷன் : ராஜநாதன் பெரியசாமி. ஆர்ட்டிஸ்ட் : நட்டி [எ] நட்ராஜ், சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், வழக்கு எண் முத்துராமன், கோதண்டம், ஒளிப்பதிவு : எம்.ஆர்.எம்.ஜெய் சுரேஷ், இசை : சதீஷ் செல்வம், எடிட்டிங் : எஸ்.என்.ஃபாசில், பி.ஆர்.ஓ : ஷேக்.

கம்பி கட்ன கதை
கம்பி கட்ன கதை

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்தியாவிலிருந்து விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை வெள்ளைக்காரன் ஒருவன் இங்கிலாந்துக்கு கொண்டு போனான். நல்ல மார்க்கெட்டில் அதை விற்க முடியாததால், கள்ளமார்க்கெட்டில் விற்க முயற்சிக்கிறான். அதுவும் முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வெள்ளைக்காரனின் பரம்பரையிலிருந்து ஒரு பெண், அந்த வைரத்தை விற்க இந்தியாவுக்கே வருகிறாள். இங்கிருக்கும் போலீஸ் கும்பல் அவளைக் கடத்தி, அந்த வைரத்தை ஆட்டையப் போட நினைக்கிறது. ஆனால் அவளிடம் வைரம் இல்லை. அந்த வைரத்தைக் கைப்பற்ற பிரபல கேடி நட்டியின் உதவியை நாடுகிறது.

அந்த வைரத்தை தனி ஆளாக ஆட்டையப் போட ப்ளான் பண்ணுகிறார் நட்டி. அதன் பின் நடக்கும் சவச்சவ கதை தான் கம்பி கட்ன கதை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கம்பி கட்ன கதைவெள்ளைக்காரன் காலம், கோஹினூர் வைரம்னு படத்தை ஆரம்பிச்சதும், நல்லாத்தானே ஆரம்பிக்கிறாய்ங்க, காமெடில களைகட்டப் போகுதுன்னு எதிர்பார்த்து ஆர்வமா உட்கார்ந்தோம். ஆனா அதுக்குப்பிறகு இரண்டு மணி நேரம் நமக்கு வச்சாய்ங்க பாருங்க ஆப்பு… தியேட்டரைவிட்டு வெளியே வந்து பலமணி நேரமாகியும் ஆப்பு அடிச்ச வலி தாங்க முடியலடா சாமீ…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

‘சதுரங்கவேட்டை’ன்னு ஒரு படம் ஓடுனாலும் ஓடுச்சு… இந்த நட்டியோட இம்சை தாங்கமுடியல. அதே பாடிலாங்குவேஜ்ல, டயலாக் மாடுலேஷன்ல எல்லா படங்களிலும் வந்து இந்த நட்டி படுத்துறபாடு இருக்கே….கொடுமைடா சாமி. இந்தப் படத்திலும் சிங்கம்புலியைத் தவிர, நட்டி உட்பட எல்லோருமே நட்டு கழண்ட கேஸுங்க மாதிரி நடிச்சு நம்மள லூசாக்கிட்டாய்ங்க. ஏதாவது ஒரு சீன்ல சிரிச்சுப்புடலாம்னு எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தோம். ஆனா அப்படியெல்லாம் உங்களை சிரிக்க விட்ருவோமான்னு கங்கணம் கட்டிக்கிட்டு நம்மள கொலையா கொன்னுட்டாய்ங்க.

கம்பி கட்ன கதைபடத்துக்கு டைட்டில் கம்பி கட்ன கதைன்னு வச்சுப்புட்டதால கண்டமேனிக்கு கதைவிட்டு ரசிகர்களை கதறவிடுறாய்ங்க.

டைரக்டர் ராஜநாதன் பெரியசாமி & கோவிடம் மாட்டிக்கிட்ட தயாரிப்பாளர் ரவி மட்டும் சந்தோஷமாவா இருந்துரப் போறாரு? ”அய்யோ…என்னோட காசையெல்லாம் காலியாக்கி என்னை சாகடிச்சுட்டாய்ங்களே” என அவரும் கதற வேண்டியது தான். அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? சிக்குனவனை சோலி முடிக்கிறதுக்குன்னே சினிமாவில் ஒரு கும்பல் சுத்திக்கிட்டிருக்கு. உஷாரா இருந்தா உயிராவது மிஞ்சும்…

போங்கடா நீங்களும் உங்க கம்பி கட்ன கதையும்.

 

 —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.