‘காந்தாரா சேப்டர்-1’ ஸ்பெஷல் ஸ்டாம்ப் ரிலீஸ்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘ஹொம்பாலே பிலிம்ஸ்’ தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி, அக்போடர்.02—ஆம் தேதி ஐந்து மொழிகளில் ரிலீசாகவுள்ள பிரம்மாண்ட படம் ‘காந்தாரா சேப்டர்-1’. சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் ரிலீசாகி ஏகோபித்த வரவேற்பையும் எக்கச்சக்க எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் புரமோவுக்கு சப்போர்ட் பண்ணும்விதமாக கர்நாடக மாநில அஞசல் துறையின் வட்டார இயக்குனர் சந்தோஷ் மகாதேவப்பா, பெங்களூரு முதன்மை போஸ்ட் மாஸ்டர் எச்.எம்.மஞ்சேஷா, படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் இணைந்து ‘காந்தாரா சேப்டர்.1’ க்கான சிறப்பு அஞ்சல் அட்டைகளையும் ஸ்டாம்பையும் செப்.22—ஆம் தேதி பெங்களூருவில் வெளியிட்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘காந்தாரா சேப்டர்-1’ “எங்கள் மரபின் வேர்களையும் மரபுகளையும் கெளரவப்படுத்தும்விதமாக அஞ்சல் அட்டைகளையும் ஸ்டாம்பையும் வெளியிட்ட இந்திய அஞ்சல்துறைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி” என்றார் ரிஷப் ஷெட்டி.

”இது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய அங்கீகாரம் கெளரவம்” என்றார் விஜய் கிரகந்தூர்.

 

—    ஜெடிஆர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.