புனித சிலுவை கல்லூரியில் “கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா”
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் “கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா” சிறப்பாக நடைபெற்றது.
26வது கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா ஜூலை 24ஆம் தேதி கல்லூரி வளாகத்திலுள்ள சோபி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி Smart Tech, Strong Hearts: Youth in the Service of the Nation என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர். பெரோஸ், மூன்றாம் நிலை அதிகாரி – இந்திய இராணுவம் மற்றும் ஆல்பா விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் கலந்து கொண்டு, தனது உரையில் மாணவிகளுக்கு தேசபக்தி, ஒழுக்கம் மற்றும் ராணுவத்தின் தியாகம் குறித்து ஊக்கமளித்தார்.
இதையடுத்து மாணவிகள் தேசப்பற்று உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்வு மாணவிகளிடையே தேசத்தின் மீது பெருமை மற்றும் கடமை உணர்வைத் தூண்டிய நிகழ்வாக அமைந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் அருள் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில், கல்லூரி செயலர் முனைவர் அருள் சகோதரி சற்குணா அவர்களின் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.
இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் பி. மெர்லின் கோகிலா அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.