கலைஞர் பொன்மொழிகள் !

0

கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் – தத்துவங்கள்

  • பாராட்டும் புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும் !

 

https://businesstrichy.com/the-royal-mahal/

  • இடையில் வருவதும் போவதும் செங்கோல், என்றைக்கும் நிலையானது எழுதுகோல்.

 

  • தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்.

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

  • தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
  • முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்.

 

  • மேகங்களே! சூரியனால் உருவானநீங்கள், அந்தச் சூரியனையே மறைக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள், காற்று வீசத் தொடங்கினால், கலைந்தும், கரைந்தும் மறைந்துவிடுவீர்கள்.

 

  • வீரம் சாவதே இல்லை … கோழை வாழ்வதே இல்லை..

 

  • பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக்கொண்டவர்கள், பகைவர் முயற்சியில்லாமலேயே தமக்குத் தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்.

 

  • துணிவிருந்தால் துக்கமில்லை … துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை..!

 

  • அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்.

 

  • பதவிகள், பவுசுகள் வரும் போகும் …நிலைக்காது…தியாகம் மட்டுமே என்றும் நிலைக்கும்!

 

  • புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும் … உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் …
  • மனச்சாட்சி உறங்கும் போது தானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

  • பெரும்பான்மை, உடலைப் போன்றது. சிறுபான்மை, கண்களைப் போன்றது. உரிமைகள் அனைத்தும் பெரும்பான்மைக்குத்தான் என்று சொல்லி சிறுபான்மையினரைப் புறக்கணிப்பது; கண்களைக் குத்திக் கொள்கிற குருட்டுச் செயலாகும்.

 

  • சட்டத்தைப் பயன்படுத்திச் சமூகத்தை ஒழுங்குப்படுத்துவது என்பது சலவை செய்யப்பட்ட உடைகளுக்கு இஸ்திரிப்பெட்டி போடுவதுபோல, கொஞ்சம் கைதவறினாலும் சட்டைத்துணி கருகிவிடும்.

 

  • தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்று இருந்தாலும் அதனால் என்ன பயன? ஒன்றுமில்லை.
  • பொதுவாழ்க்கையில் என்மீது கற்கள் வீசப்பட்டபோதும், மலர்கள் தூவப்பட்டபோதும் இரண்டையும் ஒன்றாகக் கருதித்தான் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

 

  • உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத்தான் …

 

  • விதவை எனும் வார்த்தையில் கூட பொட்டில்லை- யாரோ. விதவை என்பது வடமொழிச்சொல். கைம்பெண் என்பதே தமிழ் வார்த்தை அதில் இரண்டு பொட்டு உள்ளது.

 

  • “இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!”

  • “அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்… ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.”

 

  • “அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.”
  • தமிழை நாடு ! தமிழ்க் கலாச்சாரத்தை நாடு! தமிழ்ப் பண்பை நாடு! தமிழ் உணர்ச்சியை நாடு! தமிழ் இலக்கியத்தை நாடு! தமிழ் உயர்வை நாடு!

 

  • மொழியால் நான் தமிழன். இனத்தால் திராவிடன். நாட்டால் இந்தியன். உலகத்தால் மனிதன். இதுதான் என்னுடைய உணர்வு. அந்த உணர்வை இளம் உள்ளங்கள் பெற வேண்டும்.

 

  • நன்றி கெட்ட நரிக்குட்டி  நீச்சல் தெரியாத மீன்குட்டி சிலரைச் சிலகாலம்  ஏமாற்றலாம்;  ஆனால் பலரைப் பலகாலம் ஏமாற்ற முடியாதம்மா!

தொகுப்பு

அங்குசம் ஆசிரியர் குழு..  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.