‘கட்டா குஸ்தி-2’ ஆரம்பம்!
விஷ்ணு விஷால் — ஐஸ்வர்யா லட்சுமி காம்பினேஷனில் 2022—ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘கட்டா குஸ்தி’. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்தை செல்லா அய்யாவு டைரக்ட் பண்ணியிருந்தார். இரண்டாம் பாகத்திற்கான ‘லீட்’ இல்லாமல் முடிந்திருந்தாலும் இன்னொரு ஸ்போர்ட்ஸ் டிராம ஜானரில் ‘கட்டாகுஸ்தி’2’வின் திரைக்கதையை எழுதியுள்ளார் செல்லா அய்யாவு. இந்த இரண்டாம் பாகத்தின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுடன் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் கைகோர்த்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார். செப்டம்பர்.02-ஆம் தேதி படத்தின் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கினாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் ‘ஸ்டார்ட் புரமோ’ வீடியோ ரிலீசாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘கட்டாகுஸ்தி-2’ ஷூட்டிங் சென்னையில் தொடங்கி அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளில் நடக்கிறது.
தொழில்நுட்பக்குழு – ஒளிப்பதிவு : கே.எம்.பாஸ்கரன், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர் : எஸ்.ஜெயச்சந்திரன், நடனம் : பாபா பாஸ்கர், ஸ்டண்ட் : முருகன், தலைமை நிர்வாகம் : நிதின் சத்யா, பி.ஆர்.ஓ : சதீஷ் [எய்ம்]
— மதுரை மாறன்