திருச்சி கலைக்காவிரி கல்லூரி மாணவர்களுக்கு ”காவலன் உதவி செயலி” விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி !
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இன்று சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் திருச்சி மாநகரக் காவல் துறை வழிகாட்டுதலின்படி கண்ட் டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமதி வனிதா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று காவலன் உதவி செயலி விளக்க விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் அவர்கள் தலைமையேற்றார். சாலை பாதுகாப்பு மன்றத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார் இசைத்துறை மாணவர்கள் செல்வன் ஆகாஷ் மற்றும் சிபி ரிச்சர்ட் அவர்களின் விழிப்புணர்வு பாடல் நிகழ்வை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு காவல் ஆய்வாளர் திருமதி வனிதா அவர்கள் காவலன் செயலியைப் பற்றி உரையாற்றி மொபைல் போனிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு விரிவான விளக்கத்தை வழங்கினார். ஆள் கடத்தல் பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் தனிமனித பாதுகாப்பு குறித்து விரிவாக விளக்கினார் .
காவலன் செயலியை தரவிறக்கம் செய்த மாணவர்கள் அச்சமின்றி சமூகத்தில் நடமாட முடியும் என்பதை விரிவாக விளக்கி தன்னம்பிக்கை ஊட்டினார். ஆண்களும் பெண்களும் சமூக ஒழுக்கத்தோடு தனிமனித ஒழுக்கத்தோடு கல்வி கற்கும் காலத்தில் கல்வியின் மீது மட்டுமே நாட்டம் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
நிகழ்ச்சி நிறைவாக சாலை பாதுகாப்பு மன்ற உறுப்பினர் முனைவர் இல. கோவிந்தன் நன்றியுரை வழங்கினார். கல்லூரியின் வளாகப் பாதுகாப்பு அலுவலர் திருமதி. ஹாரிட் அருள் செல்வி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.