’ஜனநாயகன்’ தயாரிப்பாளர்[ன்] ‘கேடி –தி டெவில்’
கன்னட சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’கே.வி.என். புரொடக்ஷன்ஸ்’. இதன் உரிமையாளரார் கே.வெங்கட் நாராயணா. இவர் தான் நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்துள்ளார். ‘ஜனநாயகனை’ ஆரம்பிக்கும் முன்பாகவே கன்னட டைரக்டர் பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா, சஞ்சய்தத், ரீஷ்மா, ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் படமான ‘கேடி தி டெவில்’ படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். ஐந்து மொழிகளில் விரைவில் ரிலீசாகவுள்ள ‘கேடி’யின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் கடந்த 11—ஆம் தேதி நடந்தது.
இதில் துருவ் சார்ஜா, சஞ்சய்தத், ரீஷ்மா, ஷில்பா ஷெட்டி, டைரக்டர் பிரேம், தயாரிப்பு தரப்பிலிருந்து சுப்ரீத் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில்..
டைரக்டர் பிரேம்,
“தர்ஷனை வைத்து நான் டைரக்ட் பண்ணிய படத்தின் டப்பிங், சி.ஜி.ஒர்க் சென்னையில் தான் நடந்தது. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிபாக பிடிக்கும்”’
சஞ்சய்தத்தும் ஷில்பா ஷெட்டியும் வழக்கம் போல “சென்னை எங்களுக்குப் பிடிக்கும், தமிழ் சினிமா ரொம்பவும் பிடிக்கும், இட்லி, சாம்பார் பிடிக்கும். அது போல இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றனர்.
ஹீரோயின் ரீஷ்மா,
“இது வெறும் டீசர் தான்.படத்தில் இன்னும் ஆச்சர்யங்கள் உள்ளன. படத்தைப் பாத்துவிட்டு நீங்கள் பாராட்டுவதைக் கேட்க ஆவலாக உள்ளேன்”.
ஹீரோ துருவ் சார்ஜா,
“இது எனக்கு ஆறாவது படம். இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த டைரக்டர் பிரேம், தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, சுப்ரீத் ஆகியோருக்கு நன்றி.இது பக்கா மாஸ் மசாலாப் படம். தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”.
— மதுரை மாறன்