மதுரை – 5 வயது குழந்தை கடத்திய வடநாட்டு இளைஞர் கைது !
மதுரை அரசரடி பகுதியில் 5 வயது குழந்தையை கடத்திய வடநாட்டு இளைஞர் – ஆட்டோவில் தப்ப முயன்ற போது சிக்கிய பரபரப்பு சம்பவம்….
மதுரை அரசரடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் திருநகர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரது ஐந்து வயது மகளான வருணிகாவை அவரது பாட்டி செல்வி சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.இந்த நிலையில் மருத்துவமனையில் பாட்டியுடன் காத்திருந்த சிறுமியை வடநாட்டு இளைஞர் நோட்டமிட்டு வந்துள்ளார்.
பின்னர் பாட்டி இல்லாத நேரத்தில் சிறுமி வருணிகாவை தூக்கிக்கொண்டு மருத்துவமனை வெளியே உள்ள ஆட்டோவில் ஏற்றி கடத்தி, தப்ப முயன்ற போது ஆட்டோ ஓட்டுனர் சுதாரித்து கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வடநாட்டு இளைஞரை மடக்கி பிடித்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இதுகுறித்து எஸ் எஸ் காலனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வடநாட்டு இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் வடநாட்டு இளைஞரை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள் ஆனந்தன்.