மூன்று மொழிகளில் மூன்று நடிகர்கள் ரிலீஸ் செய்த ‘கிங்ஸ்டன்’ டீசர்!
இசையமைப்பாளரும் , நடிகருமான ஜி.. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ படத்தின் தமிழ் டீசரை ஜனவரி -09-ஆம் தேதி முன்னணி நடிகர் தனுஷ் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசையும் ஜி. வி. பிரகாஷ் குமார் தான். படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பையும், கடலில் மிதக்கும் கப்பல் ஒன்றின் பிரம்மாண்டமும், அதில் ஜி..வி. பிரகாஷின் தோற்றமும், அதிரடியான பின்னணி இசையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் இந்த டீசரில் VFX காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்து.. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது.
‘கிங்ஸ்டன்’ இந்தி டீசரை பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தும் தெலுங்கு டீசரை நடிகர் நாகார்ஜுனாவும் வெளியிட்டனர்.
‘கிங்ஸ்டன்’ 2025 மார்ச் மாதம் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் , இந்தி, தெலுங்கு மொழியில் வெளியாகும் என டீசரில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
— மதுரை மாறன்.