செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்கள் நடத்திய அரசு பள்ளி மாணவா்களுக்கு கணினி அறிவியல் பயிற்சி மற்றும் கணிப்பொறி வழங்கும் விழா
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்ட் மூலம் இரண்டாம் ஆண்டு முதுகலை கணினி அறிவியல் துறை மாணாக்கர்கள் 09.01.2025 வியாழக்கிழமை அன்று திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனி திருவள்ளுவர் குருகுல அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அடிப்படை கணினி அறிவியல் பயிற்சியும், கணிப்பொறி வழங்கும் விழாவினை கல்லூரி மாணவர்கள் சிறப்பாக நடத்தினர்.
இவ்விழாவில் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் திரு வெனிஸ் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையில் பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவியர்களும் பெற்றோர்களும் ஒருங்கிணைந்து இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று எல்லாத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டதால் அனைவரும் கணினி அறிவை தீவிரமாக கற்றுக்கொள்ள வேண்டும். இப்பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவை தொடக்கப் பள்ளியிலிருந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கணிப்பொறியை மாணவா்களுக்கு வழங்கி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தாரணி தலைமை உரையாற்றினார். பள்ளிக்கு கணிப்பொறி வழங்கியமைக்கு கல்லூரியின் அதிபர் செயலர் முதல்வர் மற்றும் விரிவாக்கத்துறை இயக்குனர் தந்தை அருட்தந்தை பவுல்ராஜ் அருட்தந்தை அமல் அருட்தந்தை மரியதாஸ் அருட்தந்தை சகாயராஜ் அவர்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சவுத் இந்தியன் ஜிப்ஸி வெல்பர் டிரஸ்ட் தலைவர் ஜான் சிதம்பரம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் உயர்கல்வி நிறுவனம் தொண்டு நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படும்போது அரசுப் பள்ளியின் தரத்தினை மேலும் உயர்த்துவதற்கு உதவும் என்றும் கல்லூரி மாணவர்களின் முயற்சியால் கணினி அறிவினை நாம் அனைவரும் பெற்று சமூகத்தில் மேலும் வளர இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடக்க உரையாற்றினார்.
இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமுருகன் கலந்து கொண்டார். முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி ஜானகி கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரி மாணவர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். மாணவர் ரூபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாணவர்களின் சமூகப் பணிக்குழு தலைவர்கள் மாணவர் சஞ்சய், மாணவர் விலாடி மிர் மற்றும் அவர்களின் குழு மாணவர்கள் என கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரியின் நிர்வாக தந்தைகளின் அனுமதியோடு கல்லூரியின் ஜே சி ஐ சி டி அருட்தந்தை சந்தியாகு கணிப்பொறி வழங்கியமைக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
— அங்குசம் செய்திகள்.