கோவில்பட்டி அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் வேன் மோதி விபத்து – சிறுவன் காயம் !
நெல்லை மாவட்டம் வீ.கே.புதூர் அருகேயுள்ள தட்டாப்பரை பகுதியை சேர்ந்தவர் கனித்துரை. இவர் நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
முதுகுளத்தூரில் பணிகளை முடித்து விட்டு நெல் அறுவடை இயந்திரத்துடன் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கல்லூருணியை தாண்டி சென்று கொண்டு இருந்த போது சுரண்டையில் இருந்து இருக்கன்குடிக்கு சென்று கொண்டு இருந்த வேன் நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மோதியது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் வேனில் இருந்த முன் பகுதி சேதமடைந்தது. மேலும் வேனில் வந்த சுரண்டை விநாயகர் கோவில் தெருவினை சேர்ந்த மாரியப்பன் என்பவரது 11வயது மகன் முகேஷ்வரனுக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று சிறுவனை மீட்டு சிகிக்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் பாவூர் சத்திரத்தினை சேர்ந்த தேனீசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிபாரதி.