விளையாட்டு துறையில் இளம் வீரர்கள் உருவாக்கும் மத்திய, மாநில அரசுகள் ! புல்லேலா கோபிசந்த் பேட்டி…
மத்திய, மாநில அரசுகள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதால் இளம் வீரர்கள் உருவாகி நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் என தேசிய பேட்மிட்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் பேட்டி…
மதுரை கோச்சடையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பேட்மிட்டன் அகாடமி திறக்கப்பட்டது இதனை இந்தியாவின் பேட்மிட்டன் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் திறந்து வைத்து பின்னர் தமிழ்நாடு அளவிலான சப் ஜூனியர் பேட்மிட்டன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் பிப்9 வரை நடைபெற உள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புல்லேலா கோபிசந்த் கூறுகையில்,
இந்தியாவில் கல்வியைப் போல விளையாட்டின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
கல்வியும், விளையாட்டு முக்கியமானது கல்விக்கு கொடுக்கும் முக்கியத்தத்தை தற்போது விளையாட்டையும் நோக்கியே திரும்பி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக மோடி தலைமையிலான அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதே போல் தமிழ்நாடு அரசிலும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்களை தயார் செய்கிறது தமிழகத்தில் 17 வயது கோவையைச் சேர்ந்த சிறுமி பேட்மிட்டனில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பேட்மிட்டன் விளையாட்டு ஒரு காஸ்லி கேம்தான், இதனால் கிராமப்புறங்களில் இருந்து இந்த விளையாட்டுக்கு வருவது சற்று கடினமானது தான் அதற்காகத்தான் தற்பொழுது இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை, மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் பேட்மிட்டன் விளையாட்டுக்கான அகாடமி துவங்கி அதில் சிறந்த வீரர்களும் உருவாகி வருகிறார்கள்.
பேட்மிட்டன் போட்டியில் அரசியல் இருக்கிறதா? என்றால் சிறிய அளவில் உள்ளது. சிறந்த வீரர்கள் தங்களை பேட்மிட்டன் மைதானத்தில் நிரூபித்து சாம்பியனாக மாறி வருகின்றனர்.
தற்போது இருக்கும் தலைமுறையின் தாத்தா, பாட்டிக்கள், அம்மா, அப்பாக்கள் உடல் வலிமையுடன் உள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் இருக்கும் தலைமுறை கீழே அமர்ந்து எழுந்திருப்பார்களா என தெரியவில்லை. இந்த தலைமுறை உடல் மீது அக்கறை காட்டுவது கிடையாது,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விளையாட்டு உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் வித்தை, எனவே அனைவரும் விளையாட்டுக்கும் கவனம் செலுத்த வேண்டும் பெற்றோர்களும் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்க ஒத்துழைப்பு தருகின்றனர். இது அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.