கோவில்பட்டி – மகளிர் காவல் நிலையத்திற்கு விஷமருந்தி வந்தவரால் பரபரப்பு !!
மனைவியுடன் சேர்த்து வைக்க சொன்ன – பிரித்து வைக்க நினைக்கிறங்க… கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விஷமருந்தி வந்தவரால் பரபரப்பு !!
தூத்துக்குடி மாவட்டம் குருமலையை சேர்ந்தவர் மாரீராஜ்(30). விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். டிராக்டர் டிரைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் தோட்டிலோவன்பட்டி அடுத்துள்ள சுந்தரலிங்கபுரத்தினை சேர்ந்த முருகலெட்சுமிக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக மாரீராஜ் மற்றும் முருகலெட்சுமி கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். முருகலெட்சுமி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவரிடம் இருந்து தன்னுடைய 4பவுன் தங்க செயின், மோதிரம், ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று தரும்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகலெட்சுமி புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்த போலீசார் மாரீராஜை வர சொல்லி உள்ளனர். மேலும் முருகலெட்சுமியின் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.
அதன்படி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து மாரீராஜ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு தான் கொண்டு வந்த மருந்து பாட்டில் ஒன்றை காவல் நிலையம் முன்பு போட்டது மட்டுமின்றி, தான் விஷமருந்தி இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் இங்கேயே இறந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மாரீராஜ்க்கு சிகிச்சை அளிக்கப்படடது.

தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தன்னுடைய மகளை பார்க்க முடியமால் பரிதவித்து வருவதாகவும், தன்னுடைய மனைவி கொப்பம்பட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையம் என தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தன்னுடைய வேலைகளை விட்டு ஆஜராகி வருவதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் எங்களை சேர்த்து வைப்பதை விட பிரிக்க தான் நினைக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு முறையும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அவதூறாக பேசுவதாகவும், சிறைகம்பிகளுக்குள் வைத்து மிரட்டுவதாகவும், தன்னுடைய குழந்தையை கூட பார்க்க முடியவில்லை என்பதால் வேதனையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறுகிறார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற மாரீராஜ் தொிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாரீராஜ் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் விசாரணை நடத்தியதாகவும், அவரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தான் கொண்டு வர சொன்னதாகவும், வேறு எதுவும் சொல்லவில்லை என்று அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கூறுகின்றனர்.
— மணிபாரதி.