கிருஷ்ணகிரி; 13 மாணவிகள் கற்பழிப்பு ? போலி என்சிசி மாஸ்டர் சிவராமனுக்கு கால் உடைப்பு !

3

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிருஷ்ணகிரி; 13 மாணவிகள் கற்பழிப்பு ?, போலி என்சிசி மாஸ்டரும் சீமான் கட்சி பிரமுகருமான சிவராமனுக்கு கால் உடைப்பு ! மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி என்.சி.சி பயிற்சியாளரான நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் துணைப்போன , பள்ளி தாளாளர் உட்பட மேலும் 11 பேர் கைது வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் .

கிருஷ்ணகிரி சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியில் கிங்ஸ்லி  பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் , ஆக.9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதில் அந்த தனியார் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் அந்த முகாமில் கலந்து கொண்டனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

சீமான் கட்சி போலி என்.சி.சி. ஆபிஸர் - பள்ளி
சீமான் கட்சி போலி என்.சி.சி. ஆபிஸர் – பள்ளி

பதினேழு மாணவிகளும் அந்த பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்று வந்த நிலையில் என்சிசி முகாமிற்கு சென்ற 13-வயதுடைய 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆக. 8-ஆம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கி கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார் சிவராமன் , இதனை பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

கடந்த ஆக. 16-ம்தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது தாயார் மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

கிருஷ்ணகிரி சீமான் கட்சி பிரமுகர் - சிவராமன்
கிருஷ்ணகிரி சீமான் கட்சி பிரமுகர் – சிவராமன்

போலீசார் அதிரடி நடவடிக்கை

இதனையடுத்து, அந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை தொடங்கினார். விசாணையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் என்.சி.சி. பயிற்சியாளர் சிவா என்ற சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

11 பேர் கைது

இதில் பள்ளியின் முதல்வரான சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகர் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சிவராமனை நேற்று இரவா கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவராமனைத் தப்பிக்க உதவிய அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகிய இருவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள் இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி - சிவராமன்
கிருஷ்ணகிரி – சிவராமன்

தப்பி ஓடிய சிவராமனுக்கு கால் உடைந்தது.

கோவையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான சிவராமனை, நேற்று இரவு போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறார்கள். அப்போது, போலீஸாரிடம் சிக்காமல் தப்பி ஓட முயன்றபோது, கீழே விழுந்ததில் வலது கால் முறிந்துபோனதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிவராமனின் காலுக்கு மாவுக்கட்டுப் போட்டு, விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள் போலீஸார்.

கிங்ஸ்லி பள்ளி
கிங்ஸ்லி பள்ளி

இதனிடையே, கோமதி என்ற ஆசிரியையும் கைது நேற்று இரவு செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை மொத்தம் 11 பேர் கைது படலத்துக்குள் சிக்கியிருக்கின்றனர். தலைமறைவாகவுள்ள மேலும் ஒரு போலி பயிற்சியாளரான சுதாகர் என்பவரை பிடிக்கவும் தனிப்டை தேடுதல் வேட்டையில் உள்ளனர்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

13 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்

மேலும் முகாமிற்கு சென்ற 17 மாணவிகளில், ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

NCC தலைமையகம் அறிவிப்பு
NCC தலைமையகம் அறிவிப்பு

போலி என்சிசி முகாம்.

மேலும், என்சிசி பிரிவே இல்லாத தனியார் பள்ளியில் சிவராமன் போலியாக என்சிசி முகாம் நடத்தியதாக என்சிசி தலைமையகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் இதுவரை நடத்தவில்லை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தச் செய்தி ஒரு தெளிவற்ற தவறான தகவல் மற்றும் என்.சி.சி. பணியாளர்களின் ஈடுபாடு என தவறாக சித்தரிக்கப்பட்டு உண்மைகளை மறைக்கிறது” என சென்னை தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

கைது செய்யப்பட்ட போலி என்சிசி மாஸ்டர் சிவராமனிடம் போலீஸ் நடத்திய விசாரணை

அவரிடம் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் இல்லை மேலும். ஒய்வு பெற்ற சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியை என்சிசி கமாண்டர் என கூறி நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.

சிவராமன் இதே போன்று சூலகிரி தர்மபுரி போன்ற இடங்களில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் போலி என்சிசி கேம்ப் நடத்தியது அம்பலமாகியிருக்கிறது. அந்த பள்ளிகளில் எடுக்கப்பட்ட என்சிசி கேம்ப் போட்டோக்களை காட்டி, இந்த பள்ளியிலும் சிவராமன் என்சிசி முகாமை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சீமான் - சிவராமன்
சீமான் – சிவராமன்

என்சிசி பயிற்சியாளராக வேண்டும் என்றால் சேலத்தில் உள்ள மத்திய அரசு மையத்தில் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி இருப்பதாகவும், பெற்றோர்கள் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது , மேலும் சிவராமன் செல்போனில் இருந்த வீடியோக்கள் புகைப்படங்கள் அழிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் இதற்காக சைபர் க்ரைம் போலீசார் உதவியை நாட உள்ளோம், என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம்

“பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. என்.சி.சி. முகாம் தொடர்பாகப் பள்ளியில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. இதே போன்று எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடைபெற்றது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாகப் புகார் பெற்ற உடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி தேவையான, உளவியல் ஆலோசனை உதவிகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றத்தை மறைக்க முயன்ற நபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொந்தரவு, பலியால் வன்கொடுமை போன்ற புகார்களை 1098 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த கொடுமை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில், 8- ஆம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதற்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3 Comments
  1. KCR.தங்கராஜ் says

    உண்மையை உரக்கச் சொல்கிறீர்கள் உங்கள் நிறுவனத்திற்கு மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..💐👌💥

    1. J.Thaveethuraj says

      மகிழ்ச்சி சார்..

  2. Kmg says

    மகிழ்ச்சிகளும்
    நன்றிகளும்

Leave A Reply

Your email address will not be published.