”குளித்தலை” – மனிதர்களைப் போலவே நல்லடக்கம் செய்யப்பட்ட கோவில் மாடு !
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை பகுதி கல்லடை கிராமம் முத்தாநாயக்கன்பட்டியில் ஊர் சார்பில் வளர்க்கப்பட்ட கோவில் மாடு இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
அதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை அணிவித்து மனிதர்களைப் போல நல்லடக்கம் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி மனிதர்கள் இறந்தால் எப்படி சடங்கு சம்பிரதாயத்துடன் நல்லடக்கம் செய்வார்களோ அதுபோல கோவில் மாடு இறந்ததால் உறவினர்களுக்கு தகவல் சொல்லி மாலை மரியாதையுடன் வந்த உறவினர்கள் இறந்த கோவில் மாட்டிற்கு செலுத்தி பின்னர் ஊர்வலமாக சென்று நல்லடக்கம் செய்தனர்.
கோவில் மாடு இறந்ததால் கிராமமே கோவில் மாட்டை நல்லடக்கம் செய்யும் வரை உணவு உண்ணாமல் சோகத்தில் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
— நௌஷாத்.