குளித்தலையில் 169 கிலோ புகையிலை பறிமுதல்
குளித்தலையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 169 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
ஒருவர் கைது. தலைமறைவானவரை தேடுது போலீஸ்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் பகுதி, காட்டூர் ஆர்பிஎஸ் நகரை சேர்ந்தவர் திவ்யநாதன் மகன் வில்சன் பாபு வயது 33. இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கரூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு போலீசாருக்கு சென்ற ரகசிய தகவலையடுத்து,
மாயனூர் இன்ஸ்பெக்டர் கலா, மற்றும் மதுவிலக்கு போதை பொருள் ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் அழகு ராம் ஆகியோர் தலைமையில் போலீசார் காட்டூரில் உள்ள வில்சன் பாபு வீட்டிற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் விற்பனைக்காக வைத்திருந்த 169 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் ஆகும்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மாயனூரை சேர்ந்த,
முத்துக்குமார் மகன் பாக்கியா என்கிற பாக்கியராஜ் ஆகிய இருவரும் கூட்டாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் வில்சன் பாபு வை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள பாக்கியராஜை வலை வீசி தேடி வருகின்றனர்.