கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர்கள் 7 பேர் படுகாயம்
நெளசாத்
குளித்தலையில் கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர்கள் 7 பேர் படுகாயம். முன்னாள் சென்ற லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு.
குளித்தலை, ஜூலை. 23-
குளித்தலை அருகே முன்னாள்
சென்ற லாரி திடீரென நின்றதால் பின்னால் சென்ற தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 7-பேர் படுகாயம். லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், குளித்தலையை
அடுத்த புலியூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வாகனம் நேற்று மாணவர்களை ஏற்றுக் கொண்டு,
கரட்டுப்பட்டியில் இருந்து செங்கல் செல்லும் சாலையில் முத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது
முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென எந்த சிக்னலும் இல்லாமல் நின்றதால் அதன் பின்னால் சென்ற கல்லூரி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கல்லூரியில் படித்து வரும்,
மாணவர்கள் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த போதும் பொண்ணு,,
வரகூரைச் சேர்ந்த நவீன் குமார்,
கந்தன் குடியைச் சேர்ந்த பிரேமலதா,
மேட்டுப்பட்டியைச் சேர்ந்த தனுசியா,
கீழ தாளியாம்பட்டியைச் சேர்ந்த பரமசிவம்,
கொழிஞ்சி பட்டியைச் சேர்ந்த சக்திவேல்,
வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகிய 7- பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து காயம் அடைந்த போதும் பொண்ணு அளித்து வாக்குமூலத்தின் பேரில்,
கவனக்குறைவாக லாரியை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணராயபுரம் பகுதி சேங்கலை சேர்ந்த பிச்சை மகன் லாரி டிரைவர் கருப்பசாமி வயது 42. என்பவர் மீது மாயனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரராகவன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.