பிச்சை காசு – சர்ச்சையில் குஷ்பு ! எதிர்ப்பில் துடைப்பம் செருப்பு !

நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருவது  கவனிக்கத்தக்கது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிச்சை காசு – சர்ச்சையில் குஷ்பு ! எதிர்ப்பில் துடைப்பம் செருப்பு !

களிர் உரிமைத்தொகை குறித்து குஷ்பு இழிவாக பேசியது பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், அது குறித்து விளக்கம் அளித்தும் திமுகவினரை விமர்சித்தும் குஷ்பு கருத்து தெரிவித்து வருகிறார். மகளிருக்கு எதிராக மகளிர் ஆனைய உறுப்பினரே இப்படி பேசலாமா என மகளிர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு “கலைஞர் உரிமை தொகை” என்ற பெயரில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது. மகளிரிடமும், பிற மாநிலங்களிலும், பொருளாதார நிபுணர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள இத்திட்டத்தை,   தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு,  அரசுக்கு எதிரான  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று  ”தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா” என கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழ்நாடு முழுவதும்  பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், குஷ்புவும் அவர்களுக்கு சளைக்காமல் பதில் கூறி தனது கருத்தை நியாயப்படுத்த முயற்சித்து வருகிறார். தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க குஷ்பு மறுப்பு தெரிவித்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த நிலையில்,  நடிகை குஷ்புவை கண்டித்து திருவண்ணாமலை ,  செய்யாறு  , ஆரணி , போளூர் , உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் குஷ்பு உருவ பொம்மை எரித்தும் உருவப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தை கொண்டு அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் போராட்டத்தில் 2000 -க்கும் மேற்பட்ட பெண்கள்  தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

முன்னதாக, ”குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர். பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிய வாய்ப்பில்லை” என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்  மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்திக் சிதம்பரம், நடிகை ராதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருவது  கவனிக்கத்தக்கது.

  • மணிகண்டன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.