நியோமேக்ஸ் இயக்குநர் வீட்டில் இலட்சக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி, கார் பறிமுதல் !
நியோமேக்ஸ் இயக்குநர் வீட்டில் இலட்சக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி, கார் பறிமுதல் !
தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த செல்வகுமார் த/பெ. கிருஷ்ணமூர்த்தி உசிலம்பட்டி என்பவர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் I-ல் கடந்த 02.11.2023ந்தேதி சரணடைந்தார்.
செல்வகுமார் இவ்வழக்கில் 45 வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள மில்லியானா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்-டின் இயக்குநராக இருந்து வருகிறார். இவர் திமுக முக்கிய பிரமுகர் என்பதால் தலைமறைவாக இருந்து கொண்டே முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து இரண்டு முறை தள்ளுடி செய்த பிறகு வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கம்பம் செல்வகுமார் செல்வகுமார் நியோமேக்ஸ் பிரைவேட் பிராப்பர்ட்டி லிமிடெட்டின் மிக முக்கிய நபராக செயல்பட்டு பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் முதலீட்டுகளை பெற்றுள்ளார். மேலும் சூர்பா டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ், சூர்யா பேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களை கம்பத்தில் நடத்தி வந்துள்ளார்.
கடந்த 08.11.23ந்தேதி போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலத்தின் அடிப்படையில் 09.11.2023ந்தேதி செல்வகுமார் வீட்டில் அதிரடிய சோதனை மேற்கொள்ளப்பட்டு ரூ.5,80,000/- ரொக்க பணம், 46.200 கிராம் தங்க நகைகள், 139.800 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு இன்னோவா கார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.
இந்த நிலையில் கஸ்டடி முடித்து இன்று 10.11.2023ந்தேதி மாலை மதுரை TNPID நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கைதானா கமலக்கண்ணன், மற்றும் அவருடைய சகோதர் சிங்கரவேலன் ஆகியோருக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.