புலம்பும் திருச்சி மாநகராட்சி அதிகாரி
திருச்சி மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி. கமிஷனர், செயற்பொறியாளர்கள் ஆரம்பிச்சு, யாருமே அவர கண்டுக்கிறதில்லையாம். எந்த விஷயமானாலும் எல்லாரும் கமிஷனர் கிட்ட பேசிக்கிறாங்க. தேவைக்கு ஏற்ப அந்தந்த அதிகாரிகள் கிட்ட கமிஷனர் நேரடியா பேசிக்கிறாராம். என்ன நடக்குது, யாரு வந்துகிட்டு போறாங்கனு அந்த பெண் அதிகாரிக்கு தெரியலையாம். தேவையான பைல் மட்டும் பெண் அதிகாரிக்கு வருமாம். அவர் கையெழுத்து மட்டும் தான் போடணும்னு மேலிட ஆர்டராம்.
இதுல கொடுமை என்னான்னா சென்னை மீட்டிங்கு இந்த பெண் அதிகாரி தான் போகணும். அப்டி மீட்டிங்கு எந்த விஷயமும் தெரியாமல் போனா ? நல்லாவா? இருக்குனு அந்த பெண் அதிகாரி புலம்புறாங்க…