அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடி விஏஓ உட்பட 5 பேரை கைது செய்த சிபிசிஐடி !
அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடி விஏஓ உட்பட 5 பேரை கைது செய்த சிபிசிஐடி
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வட வீரநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, தாமரைகுளம், ஆகிய வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பலருக்கு அப்போது அரசு அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர் .
இந்த பட்டா மாறுதல் குறித்து பெரியகுளம் சப் கலெக்டராக இருந்த ரிஷப் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசர்களும் புகார் அளித்தார். அதன்படி தேனி மாவட்ட குற்றப்பிரிவு நில மோசடி தொடர்பாக அப்போதைய அதிமுக ஒன்றிய செயலாளர், இருந்த ஒபிஎஸ் உதவியாளர் அன்ன பிரகாஷ், பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, மற்றும் துணை தாசில்தார், சர்வேர்கள், உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இக் வடக்கு சம்பந்தமாக ஏற்கனவே அதிமுக பிரமுகர் அண்ணா பிரகாஷ், தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார் மோகன்ராம், சர்வேயர் பிச்சைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.
நேற்று சிபிசிஐடி போலீசார் வழக்கு சம்பந்தமாக விசாரணையில் விஏஓ சுரேஷ், பாலு, சுரேஷ், முத்து, ரமேஷ், உள்ளிட்டு ஐந்து பேரை சிபிசிஐடி அலுவலகத்தில் அழைத்து வந்து டிஎஸ்பி சரவணகுமார், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் முக்கிய தகவல் கிடைகதால் சிபிசிஐடி போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
– ஜெ.ஜெ.