திருச்சி கலெக்டரை உதாசினப்படுத்தும் ஊராட்சி செயலர் !

0

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள மாடக்குடி பஞ்சாயத்து செயலாளராக இருப்பவர் வித்யா. இவர் மீது பல்வேறு வகையில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விசிட் சென்ற போது இவரை நேரடியாக எச்சரிக்கையும் செய்துள்ளார்.

திருச்சி கலெக்டராக பிரதீப்குமா​ர்
திருச்சி கலெக்டராக பிரதீப்குமா​ர்

இருந்தபோதிலும் நேரடியாக கலெக்டர் 3வது முறையாக விசிட் சென்றபோது அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் எதுவும் இல்லாமல் எந்த ரிப்போர்ட் குறித்து கேட்டாலும் பஞ்சாயத்து தலைவருக்கு தான் தெரியும் எனக்கு தெரியாது என்று கலெக்டரிடமே ஏட்டிக்கு போட்டியாக வித்யா பேசியுள்ளார்.

4 bismi svs

இதில் அதிருப்தியடைந்த கலெக்டர், நான் அடுத்த பஞ்சாயத்துக்கு விசிட் போறதுக்குள்ள வித்யா பணியில் அலட்சியமாக இருந்ததால் அவரை கல்விக்குடி பஞ்சாயத்துக்கு பணி மாற்றம் செய்து விட வேண்டும் என பிடிஓவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்விக்குடி செயலர் திருமுருகனை மாடக்குடிக்கும், வித்தியாவை கல்விக்குடிக்கும் பணி மாற்றம் உத்தரவு பிறப்பித்தார் பிடிஓ.

- Advertisement -

இதில் மாடக்குடி பஞ்சாயத்து செயலர் வித்தியா பணி மாற்றம் உத்தரவை வாங்காமல் கடந்த 3 நாட்களாக தட்டிக்கழித்து வருகிறார்.
பணி மாற்றம் உத்தரவைக்கொண்டு சென்ற அதிகாரிகளிடம் நான் கல்வி மந்திரியிடம் சொல்லி என்னுடைய டிரான்ஸ்பர் ஆணையை ரத்து செய்துவிடுவேன். நீங்கள் வேலைய பாருங்கள் என்று சொல்லி விரட்டி அடித்துள்ளார்.

கல்வி மந்திரி அன்பில் மகேஸ்க்கு உறவினரான மாடக்குடி பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதியின் கணவர் அண்ணாத்துரையோ மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் எதுக்கு வித்தியாவை டிரான்ஸ்பர் உத்தரவை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துறீங்க என்று எதிர் கேள்வி கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்…

நாம் இது குறித்து செயலர் வித்யாவிடம் பேசினோம்..அப்போது அவர் “சார்.. நான் கலெக்டரை பார்த்து பேசிட்டேன், அவர் என்னை தொடர்ந்து பணியில் இருக்க சொல்லியிருக்கிறார் என்றார். பிடிஓவோ “கலெக்டர் என்னிடம் எதையும் சொல்லவில்லை..“ என்றார். இந்த பஞ்சாயத்து நீடித்துக்கொண்டு போகிறது… என்ன நடக்கிறது… கலெக்டர் உத்தரவில் ஒரு பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையே என்பது .

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.