சேலம் சரகத்தில் 12 போலி மருத்துவர்கள் கைது !

0

சேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் 12 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பணிபுரிந்து, அனுபவ அடிப்படையில் ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சேலம் சரக காவல் துறை டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, சேலம் சரகத்தில் இதுபோன்ற முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்துவரும் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

2 dhanalakshmi joseph
டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி
டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி
4 bismi svs

இதைத்தொடர்ந்து சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முறையாக மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவ தொழிலில் ஈடுபட்டுவந்த சங்ககிரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (63), தேவராஜன், ஓமலூரை சேர்ந்த மணிகண்டன் (38), வாசுதேவன் (46), ஆன்ட்ரோஸ் (40) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- Advertisement -

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாதிம் (25), கோவிந்தராஜ் (50), மிதுன்குமார் (27), குப்புராஜ் (48), பெங்களூரை சேர்ந்த முகமது ஷெரீப் (70) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.மேலும் தருமபுரி மாவட்டத்தில் முருகேசன் (62), முனுசாமி (63) ஆகியோர் உள்பட 12 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல போலி மருத்துவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சேலம் சரகத்தில் உள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

-சோழன் தேவ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.