இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து நில மோசடி ! ஊராட்சி மன்ற தலைவர் கைது !

0

இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து நில மோசடி 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் கைது.

தேனி மாவட்டம், போடி தாலுகா, அணக்கரைபட்டி, ஜெயபிரகாஷ் பூர்வீக சொத்தானது பட்டா எண் 178-மற்றும் 1047 ல் சர்வே எண் 474/4, 474/5, 474/8 ஆகிய சர்வே எண்களில் கட்டுப்பட்ட 2 ஏக்கர் 54 செண்ட் புஞ்சை நிலம் இருந்துள்ளது. ஜெயபிரகாஷ் வாரிசுகள் பெயரில் பட்டா இருந்து அனுபவித்து வந்துள்ளார்கள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அணை கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன்
அணை கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன்

கடந்த 17.10.1996-ம் தேதி சொத்தின் உரிமைதாரர்களான ஜெயபிரகாஷ், தாத்தா ஒச்சாத்தேவர் மற்றும் அவரது வாரிசுகளும் சேர்ந்து அந்தோனி ஜோசப் மகன் அந்தோனி டாமெனிக் என்பவருக்கு பொது அதிகார ஆவணம் (ஆவண எண்.2490/96) எழுதி வைத்துள்ளார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அதன்பின்னர் 15.02.2022-ம் தேதி சொத்துக்கு அந்தோனி டோமினிக் ஜெனரல் பவர் ஏஜென்டாக இருந்து தங்கமாயன் ஆவண எண்.931/2022-ன் பிரகாரம் கிரையமாக பதிவு செய்து கொடுத்துள்ளார்.

பத்திரபதிவின்போது 28.06.2016-ம் தேதி இறந்த ஜெயபிரகாஷ் தாத்தா ஒச்சாத்தேவரும். 26.06.2020-ம் தேதி இறந்த முருகன் என்பவரும். 21.09.2019-ம் தேதி இறந்த பெருமாள் என்பவரும் உயிருடன் இருந்ததாக பாபு மருத்துவ அதிகாரி கொடுத்த போலியான உயிருடன் இருப்பதாக சான்றினை போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கார்த்திகேயன் சார்பதிவாளர் போலி ஆவணங்களை பதிந்து கொடுத்துள்ளார். பத்திர எழுத்தர் முருகன் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்துள்ளார். அந்த போலி ஆவணத்தில் குமரேசன், சீனிவாசன், எதிரிகள் சாட்சி கையொப்பமிட்டுள்ளார்கள்.

அணை கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன்
அணை கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன்

ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் கூட்டுச்சதியால் எதிரிகள் அனைவரும் ஒன்றுகூடி போலியான ஆவணங்களை உருவாக்கி மோசடியாக பத்திர பதிவு செய்துள்ளனர். அதன்பின்னர் 22.02.22-ம் தேதி தங்கமாயன் என்பவர் அவரது மகனான சஞ்சய்சர்மா என்பவருக்கு தானசெட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள்ளார்.

புகார்தாரர் ஜெயபிரகாஷ் என்பவர் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேனி குற்றவியல் நீதித்துறை ஒரு நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். புகார் மனுவை பார்வையிட்டு வழக்கு பதிவு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் லோகநாதன், அந்தோனி டோமினிக், தங்கமாயன், பாபு, கார்த்திகேயன், முருகன், குமரேசன், சீனிவாசன், சஞ்சை சர்மா, முகேஷ் சர்மா, அருண்பாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இன்று 28.04.2023  நில மோடி வழக்கில் அணை கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் கைது செய்யப்பட்டார்.

– ஜெ.ஜெ.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.