சேலத்தில் மண் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ. வை கொலை செய்ய முயன்ற சமூக விரோதிகள் ! அடுத்த பகீர் புகார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலத்தில் மண் கடத்தல் கும்பலின் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்ய முயன்ற சமூக விரோதிகள்

தூத்துக்குடியில் மணல் கடத்தல் கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த வி ஏ ஓ படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடைவதற்கு சேலத்தில் விஏஓ வை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy

மணல் கடத்தல் கும்பல் வாகனங்கள்
மணல் கடத்தல் கும்பல் வாகனங்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர், பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்ததால், அதே பகுதியை சேர்ந்த மண் கடத்தும் சமூக விரோதி சித்துராஜ் என்பவர் வீச்சரிவாளுடன் வெட்டி கொலை செய்யும் நோக்கில் கிராம நிர்வாக அலுவலரை விரட்டி உள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மணல் கடத்தல் கும்பல் வாகனங்கள்
மணல் கடத்தல் கும்பல் வாகனங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி இன்றி மண் கடத்தியதாக மானாத்தாள் பகுதியைச் சேர்ந்த சித்துராஜ் மற்றும் உப்பாரப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த விஜி ஆகிய இருவர் மீதும் கனிம வளத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மண் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் வழக்கம் போல் இன்று காலை மானாத்தாள் கிராமத்தில் உள்ள அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

Flats in Trichy for Sale

கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார்
கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார்

அப்போது தொளசம்பட்டி அருகே உள்ள கரட்டூர் பிரிவு சாலை எனும் இடத்தில் சித்துராஜ் வழிமறித்து, விஏஓவை தாக்கி செல்போனை பிடுங்கி உள்ளார்.

தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உன்னை கொன்றால் இனி எந்த விஏஓக்களும் மண் வண்டியை பிடிக்க மாட்டார்கள் என கூறிக் கொண்டே , தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து , வெட்ட முயன்றுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார்
கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார்

உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஏஓ இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வேகமாக தப்பி உள்ளார். ஆனால் சித்துராஜ் பின்னாலேயே வீச்சருவாளுடன் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று விஏஓவை கொல்ல முயன்றுள்ளார்.

அங்கிருந்து உயிர் தப்பிக்க விஏஓ வினோத்குமார் அருகே இருந்த தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து சித்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சித்துராஜை வலை வீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மணல் மாப்பியாக்களால் விஏஓ வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் விஏஓவை கொலை செய்ய வீச்சரிவாளுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– சோழன்தேவ் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.