கத்தி முனையில் காரில் கடத்தப்பட்ட வழக்கறிஞர் !
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வழக்கறிஞரை காரில் கத்தி முனையில் கடத்தி சென்ற கும்பல் – கடத்தப்பட்ட வழக்கறிஞரின் உறவினர் உட்பட 4 பேர் கைது….
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்வேல் ஆகிய இருவரும் உறவினர்கள். இந்நிலையில் வழக்கறிஞர் செந்தில்வேல் ராஜ்குமாரிடம் ரூ10லட்சத்திற்கு மேல் கடனாக பெற்ற நிலையில் பணத்தை கொடுக்காமல் தாமதித்து வந்துள்ளார்

இந்நிலலையில் செந்தில்வேலை கடத்தி பணம் பெறுவதற்காகவும், பணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து மதுரை வந்த வழக்கறிஞர் செந்தில்வேலின் உறவினரான முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமார் தனது நண்பர்கள் மூலமாக நேற்று மதியம் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் மதுரை தல்லாகுளம் கருப்பணசுவாமி கோவில் அருகே வழக்கறிஞர் செந்தில்வேலின் காரை மடக்கிய ராஜ்குமார் காரில் ஏறியுள்ளார். பின்னர் கார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை அருகே சென்றபோது திடிரென ராஜ்குமார் கார் ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி காரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது காரில் இருந்து வழக்கறிஞர் செந்தில்வேல் இறங்கி தப்ப முயன்றபோது ராஜ்குமாரின் நண்பர்கள் செந்தில்வேலை அடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்திசென்றுள்ளனர்இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறை புகார் எண் 100க்கு புகார் அளித்த நிலையில் காரை பின் தொடர்ந்த பைக் எண்ணை வைத்து தல்லாகுளம் காவல்துறையினர் காரை பின் தொடர்ந்து தேடியுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்போது மானாமதுரை அருகே காரை மடக்கிபிடித்த தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கறிஞர் செந்தில்வேலை மீட்டு அவரை கடத்திய உறவினரான முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமாரின் நண்பர்களான கெளதம், மாரிமுத்து, ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்பத்து லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் உறவினர் மூலமாக வழக்கறிஞர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கறிஞர் செந்தில்குமாரின் உறவினர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.