தலைவனுக்கெல்லாம் தலைவர்களின் சிலை தரை மட்டத்தில்..! தலைவர்களின் தொண்டர்கள் தர்ம சங்கடத்தில் …!
கலைஞர் கருணாநிதி சிலையை வானுயரத்திற்கு நிறுவி அதன் அருகில் அவரின் தலைவர்கள் சிலைகள் தரை மட்டத்தில் இருப்பதை பொருட்படுத்தாமல் விட்டது பெரியார் கொள்கை வாதிகளுக்கும் திராவிட உணர்வாளர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன அப்படிப்பட்டவர்கள்தான் . தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி.
இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர்கள் இவர்கள். இவர்கள் வழியில் இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்திவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்கின்ற விபி சிங் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் அவரின் இந்த செயல், இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது.
அப்படிப்பட்ட அவரை மானசீக தலைவராக ஏற்க்கொண்டவர்களால் அவர் பெயர் தாங்கிய சில அடையாளங்களை அமைத்தனர் , அவற்றில்,
வி.பி. சிங் நகர், கோளிவாக்கம் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டம் , வி.பி. சிங் நகர் பொன்னியம்மன்மேடு சென்னை. வி.பி. சிங் நகர் புதுச்சேரி . இவற்றோடு திருப்பத்தூர் வி.பி. சிங் திருமண மண்டபமும் ஒன்று.
இதனை நிறுவியவர்கள் திருப்பத்தூர் நகரை சேர்ந்த “பாலன் சகோதரர்கள் என அழைக்கப்பட்ட ” தந்தை பெரியாரின் தொண்டர்களான” இவர்கள் தங்கள் வசமிருந்த இடத்தில் விபிசிங் பெயரில் திருமண மண்டபத்தை எழுப்பி அதன் எதிரில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகள் அமைத்து விபிசிங் பொற்கரங்களால் திறக்க வைத்தார்கள்
அப்படி மகத்தான தலைவரால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மார்பளவு சிலைகளின் அருகில் தான், இன்று திறக்கப்பட இருக்கும் கலைஞர் கருணாநிதி சிலையை வானுயணத்திற்கு நிறுவி உள்ளனர்
*பெரியார் உணர்வாளரின் ஆதங்கம்*
காலப்போக்கில் ரோட்டின் உயரம் கூடிக்கொண்டே போனதில் சிறிதறவு உயரத்திற்கு அமைக்கப்பட்ட பெரியார் அண்ணா மார்பளவு சிலைகள் தற்போது தரை மட்டத்தில் காட்சி அளிக்கின்றது
கலைஞர் சிலையோடு பார்பதற்கு அவரின் காலடியில் இருபெரும் தலைவர்களின் மார்பளவு சிலைகள் இருப்பது போன்ற உணர்வுகள் எழுகிறது
பெரியர். அண்ணா, அவர்களால் வளர்க்கப்பட்ட கருணாநிதிக்கு வானுயர சிலை அமைத்தவர்களின் கண்ணுக்கு , அதனை ஒட்டி அண்ணா பெரியார் சிலைகள் தரையோடு தரையாக இருப்பது அவர்களின் கொள்கை வாதிகளான ‘என்னைபோன்றோர்கு ‘ மன நெருடலாகவும் பார்ப்போருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது

கலைஞர் சிலை அளவிற்கு இல்லையென்றாலும், அந்த இரு தலைவர்களின் சிலைகளை சில அடி உயரத்திற்கு பீடத்தை அமைத்து புதுப்பித்து இருக்கலாம் என்கிறார் *சமூக ஆர்வலரும் “பெரியாரிஸ்ட் வாதியான சண்முகம் அவர்கள்”
கடந்த சில மாதங்களாகவே சிலை அமைக்கும் குழு மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு . மாவட்ட செயலாளர் தேவராஜ். எம்எல்ஏ நல்லதம்பி. எம்பி அண்ணாதுரை ஆகியோர் பலமுறை சிலை நிறுவப்பட்ட இடத்தில் ஆய்வு செய்துவிட்டு போன இவர்களில் ஒருவருக்கு கூடவா கருணாநிதி சிலையை உயரத்தில் வைத்து பார்க்கும்போது பெரியார். அண்ணா சிலைகள் தரை மட்டத்தில் இருப்பதை உணரமுடியவில்லை

இது சம்பந்தமாக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏமான தேவராஜிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு
நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி அனைத்தும் பொருப்பு அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் சிலை அமைக்கும் பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது என முடித்துக்கொண்டார்
அமைச்சர் வேலு’வின் எண்ணிற்கு தொடர்பு கொண்டோம் ஐயா சிஎம் புரோகிராமில் இருக்கிறார் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க தற்போது இயலாது என கூறி அழைப்பை துண்டித்தார்
வி.பி.சிங் இந்திய அரசியலில் குறிஞ்சிப்பூ , சமூக நீதியின் போர்வாள்.. இந்திய நிலப்பரப்பில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மத்திய அரசு பணியில் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பெரும் விளக்கு , அவருக்கு ஆளூயர சிலை அமைக்க அதற்காகவே தமிழ் நிலம் பெரும் நன்றிக் கடன்பட்டிருக்கிறது இப்படிதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து சொன்னது போலவே விபிசிங் சிலை திறந்தும் வைத்தார் அப்படிப்பட்ட தலைவரால் திறந்துவைக்கப்பட்ட தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா சிலைகளை புதுப்பிக்காமல் விட்டது ஏனோ ..?
— மணிகண்டன்