“இதோடு விட்டு விடுங்கள்!” காலில் விழுந்து கதறிய கட்டிப்பிடி பேரா.கணேசன்“
“இதோடு விட்டு விடுங்கள்!” காலில் விழுந்து கதறிய கட்டிப்பிடி பேரா.கணேசன்“
கழிவறையில் ஓடி ஒளிந்த கட்டிப்பிடி பேராசிரியர்” என்ற தலைப்பில், காமராஜர் பல்கலை கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கணேசன், தேனியில் செயல்பட்டு வந்த மாலை நேரக்கல்லூரியின் பேராசிரியை ஸ்ரீலெட்சுமிக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து எழுதியிருந்தோம். திடீரென்று பறிக்கப்பட்ட பேராசிரியர் பணி; இரண்டு வருட சம்பள பாக்கி; தனக்கு இழைக் கப்பட்ட பாலியல் கொடுமை ஆகியவற்றுக்கு நீதி கேட்டு போலீசு, பல்கலைக்கழக நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகிய வற்றுக்கு புகார் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார், பாதிக்கப்பட்ட பேராசிரியை ஸ்ரீலெட்சுமி.
”என் மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு நியாயம் கேட்டு, அப்போதே பேராசிரியர் கணேசனை பார்க்க போனோம். “அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் தவறு பண்ணிவிட்டேன். இதை நீங்கள் பெரிதாக்கினால், எனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும்.
இதோடு விட்டுவிடுங்கள்..”னு எங்க காலில் விழுந்து கெஞ்சவும் விட்டுட்டு வந்தோம். வாங்குன காசு ரூ.50,000/-க்கு கையோடு செக் எழுதியும் கொடுத்திட்டாரு. எங்கள அனுப்பிவிட்டுட்டு, தேனி காலேஜிக்கு போன போட்டு, அடுத்த நாள்ல இருந்த என் மகளை வேலைக்கு சேர்க்க வேணாம்னு சொல்லிட்டாரு.” என்கிறார், ஸ்ரீலெட்சுமியின் தாயார் அனுசுயா.
மதுரை காமராஜர் பல்கலை கழக பேராசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கிசுகிசு பாணியில் அல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நேர்காணல் கண்டு, தகுந்த ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறோம். முன்னாள் மாணவர்களும் மதுரை நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கின்றனர். இவ்வளவுக்குப் பிறகும்கூட, மதுரை காமராஜர் பல்கலைகழக நிர்வாகத் தரப்பில், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிப்பதாக குறைபட்டுக் கொள்கிறார்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இதுவரை, வரலாற்றுத்துறை, தமிழ்த்துறை பேராசிரியர்களின் பாலியல் அத்துமீறல்களை வெளிக்கொணர்ந்திருக்கிறோம். இதோடு பட்டியல் நிறைவடைவதாகவும் இல்லை. காமராஜர் பல்கலை கழகத்தில் குறைந்தது துறைக்கு ஒரு பாலியல் பேராசிரியர்கள் இருப்பார்கள் போல. நம் கவனத்திற்கு வரும் ஒரு விசயத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளும் நடவடிக்கையில் அடுத்தடுத்து ”பகீர்” தகவல்கள் வந்து விழுகின்றன.
”பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!” என்றார் மகாகவி. பல்கலை விடுதியில் அசந்து தூங்கும் மாணவியை நடுசாமத்தில் அழைத்து தொந்தரவு செய்கிறார், பேராசிரியர் ஒருவர்.
விரிவான செய்தி அடுத்த இதழில்.
– ஷாகுல் படங்கள்: ஆனந்த்