திருச்சியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை.

0

திருச்சியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தென்னிந்திய இசையான தமிழ்ச் செவ்வியல் இசை மற்றும் மேற்கத்திய ஜெர்மன் இசை இடையிலான ஒற்றுமை வேற்றுமை ஒத்திசைவான தனித்தன்மை குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைக்காவிரி இசைத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கர்னாடக சங்கீத முறையில் மெட்டமைத்து ஜெர்மன் மொழியில் பாடல் பாடினர். இப்பாடல் ஜெர்மன் மாணவர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கருவி இசையான வீணை, வயலின், மிருதங்கம், குழல் கடம், கஞ்சிரா, மோர்சிங் உள்ளிட்ட கருவி இசைக் கச்சேரியை மாணவர்கள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ஜெர்மன் மாணவர்கள் பாடல்கள் பாடினர். இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை மறைமாவட்ட ஆயர் Dr. சந்திரசேகரன், கத்தோலிக்கத் திருச்சபையின் திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் .அருள்பணி.L. அந்துவான் அடிகளார், கல்லூரியின் மேனாள் செயலர் அருள்பணி. A.சூசை அலங்காரம், கலைக்காவிரி கல்லூரியின் முதல்வர் Dr. P. நடராஜன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் Dr. பால்தயாபரன், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.முன்னதாக கல்லூரியின் செயலர் அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ வரவேற்புரையாற்றினார். இசைத்துறைத் தலைவர் Dr. V. லட்சுமி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.