அங்குசம் சேனலில் இணைய

வியப்பில் ஆழ்த்திய வினோதமான விளம்பரம்..?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வியப்பில் ஆழ்த்திய வினோதமான விளம்பரம்..?

LIC News
LIC News

பொதுவாக விளம்பரங்கள் என்றாலே, ஏதேனும் ஒன்றை நம் தலையில் கட்டுவதாகவே இருக்கும். ஆனால், தினசரிகளில் முதல் பக்கத்தில் அதுவும் முழுப்பக்கத்திற்கு வெளியான அந்த விளம்பரம் வித்தியாசமாக இருந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரம் தான் அது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாலிசி பற்றிய அறிவிப்பு என்றால் கூட பரவாயில்லை. ஆனால், அதுவும் இல்லை.

வேறு எதற்காக முழுப்பக்கத்திற்கு விளம்பரம்? தங்களது எல்.ஐ.சி. நிறுவனத்தின் பல்வேறு பாலிசிகளில் பணம் செலுத்தி அதன் முதிர்வு காலம் முடிந்தும் பலனை பெறாத வாடிக்கையாளர்களுக்கான பொது அறிவிப்பு அந்த விளம்பரம். வெறும் சடங்குத்தனமான அறிவிப்பாக அல்லாமல், வாட்சப் வழி உரையாடல் வழியாகக்கூட எளிதான முறையில் பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளோடு வெளியாகியிருக்கிறது அந்த விளம்பரம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதே தனியார் துறை காப்பீடு நிறுவனமாக இருந்தால், இதுபோன்ற பொது அறிவிப்பு வெளியிடுமா? அப்படியே வெளியிட்டாலும் அரசின் ஏதேனும் ஒரு கட்டாய விதியை‌ அமல்படுத்தியதாக கணக்கு காட்டுவதற்காக கண்ணுக்கு புலப்படாத அளவில் வெளியாகியிருக்கும்.

வட்டி குறைவு என்றாலும் தலைமுறை கடந்தும் போட்ட பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு சந்ததியினரையும் சரியாக சென்றடையும் என்பதற்கு இந்த விளம்பரம் ஒரு சான்று.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கண்ட கம்பெனிகளில் பணத்தை இழந்து, தலைமறைவாக பதுங்கி இருக்கும் அதன் நிர்வாகிகளை தேடி அலைய நேரிட்ட அவலத்திற்கு மத்தியில் ஆறுதல் அளிக்கும் தகவல் இது!

மித்ரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.