பொதுவாக விளம்பரங்கள் என்றாலே, ஏதேனும் ஒன்றை நம் தலையில் கட்டுவதாகவே இருக்கும். ஆனால், தினசரிகளில் முதல் பக்கத்தில் அதுவும் முழுப்பக்கத்திற்கு வெளியான அந்த விளம்பரம் வித்தியாசமாக இருந்தது.
அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரம் தான் அது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாலிசி பற்றிய அறிவிப்பு என்றால் கூட பரவாயில்லை. ஆனால், அதுவும் இல்லை.
வேறு எதற்காக முழுப்பக்கத்திற்கு விளம்பரம்? தங்களது எல்.ஐ.சி. நிறுவனத்தின் பல்வேறு பாலிசிகளில் பணம் செலுத்தி அதன் முதிர்வு காலம் முடிந்தும் பலனை பெறாத வாடிக்கையாளர்களுக்கான பொது அறிவிப்பு அந்த விளம்பரம். வெறும் சடங்குத்தனமான அறிவிப்பாக அல்லாமல், வாட்சப் வழி உரையாடல் வழியாகக்கூட எளிதான முறையில் பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளோடு வெளியாகியிருக்கிறது அந்த விளம்பரம்.
அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..
3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy
இதே தனியார் துறை காப்பீடு நிறுவனமாக இருந்தால், இதுபோன்ற பொது அறிவிப்பு வெளியிடுமா? அப்படியே வெளியிட்டாலும் அரசின் ஏதேனும் ஒரு கட்டாய விதியை அமல்படுத்தியதாக கணக்கு காட்டுவதற்காக கண்ணுக்கு புலப்படாத அளவில் வெளியாகியிருக்கும்.
வட்டி குறைவு என்றாலும் தலைமுறை கடந்தும் போட்ட பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு சந்ததியினரையும் சரியாக சென்றடையும் என்பதற்கு இந்த விளம்பரம் ஒரு சான்று.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கண்ட கம்பெனிகளில் பணத்தை இழந்து, தலைமறைவாக பதுங்கி இருக்கும் அதன் நிர்வாகிகளை தேடி அலைய நேரிட்ட அவலத்திற்கு மத்தியில் ஆறுதல் அளிக்கும் தகவல் இது!
மித்ரன்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen