தொழில் போட்டியில் வெறிச்செயல்! கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறில், கடந்த 06.05.2023-ம் தேதி சமயபுரம் அரசு மதுபான கடை எண் 10352 பாருக்கு செல்லும் சந்தில் உள்ள படிக்கட்டுக்கு பின்புறம் வைத்து பாபு 28/23 த/பெ மாரியப்பன், சேனியர் கல்லுகுடி, சமயபுரம் என்பவரை 1) வெங்கடாஜலபதி 26/23 த/பெ நீலமேகம், மாரியம்மன் கோவில் தெரு, வீ.துறையூர், சமயபுரம், 2) கணேசன் 38/23 த/பெ நீலமேகம். -do- 3) விநாயக மூர்த்தி 25/23 த/பெ நீலமேகம். -do- 4) வள்ளி அருணண் 20/23 த/பெ நீலமேகம் do, 5) L 31/23 த/பெ இளங்கோவன், அரிஜனத்தெரு, மகாளிகுடி, சமயபுரம், 6) ராமு 23/23 த/பெ ரமேஷ், ராஜா புதுதெரு, மகாளிகுடி, சமயபுரம், 7)அருண் 22/23 த/பெ வேல்முருகன் -do-. 8) ராஜிவ்காந்தி 36/23 த/பெ பிச்சை. மாரியம்மன் கோவில் தெரு, 9) லெட்சுமணன் 23/23 த/பெ ரமேஷ், ராஜா புதுதெரு, மகாளிகுடி, சமயபுரம் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்
ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

Sri Kumaran Mini HAll Trichy

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி இறந்து போன பாபு என்பவரின் தந்தை மாரியப்பன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரிகள் மீது . 153/2023 U/S 147, 148, 341, 120(b), 302 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.

Flats in Trichy for Sale

இந்நிலையில் இன்று (24.04.2025) அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்ட நிலையில், திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.சரவணன் (ADJ-II) அவர்கள் மேற்படி வழக்கின் எதிரிகள் A1. வெங்கடாஜலபதி, A2. கணேசன், A3. விநாயகமூர்த்தி, A4. வள்ளி அருணண் ஆகியோர்களுக்கு IPC 120 (b) பிரிவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய். 5000 அபராதமும், 302 IPC க்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய். 5000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும், இவ்வழக்கின் மீதமுள்ள எதிரிகளான A5.அலெக்சாண்டர், A6.ராமு, A7.அருண். A8.ராஜீவ் காந்தி, A9.லட்சுமணன் ஆகியோர்களை 235(1) CrPc – ன் படி இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் நிலைய ஆளிநர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.