குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் சுகதேவ் தெருவின் அவலம் !
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சாலை வசதிகள் மேற்கொள்ளாததால் குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சுகதேவ் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சாலை வசதிகள் மேற்கொள்ளாததால் குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அவல நிலை நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. மேலும் இந்த சுகதேவ் தெருவில் முறையாக குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, வீட்டு வரி செலுத்தப்பட்டு வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிலையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, கடந்த ஆறு மாதமாக சுகதேவ் தெருவிற்கு மட்டும் சாலை வசதி ஏற்படுத்தி தராமல் குண்டும் குழியுமாக கன்னித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.
எனவே உடனடியாக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக காணப்படும் சுகதேவ் தெருவிற்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.