குவாட்டர் வாங்கினால் சைடிஷ், வாட்டர் ஃப்ரீ திருச்சியில் கனஜோராக விற்கும் மதுபானம் !
திருச்சி வயலூர் சாலையில் அரசு விதிமுறைகளை மீறி கனஜோராக நடைபெறும் மதுவிற்பனை!
திருச்சி மாவட்டம் வயலூர் ரோடு கீதா நகர் பஸ் ஸ்டாப் எதிர்புறத்தில் டாஸ்மார்க் மற்றும் பார் இயங்கி வருகிறது. இதில் டாஸ்மார்க் கடையில் அதிகாலை முதலே டாஸ்மார்க் கடை ஊழியர்கள் துணையோடு மதுபானம் விற்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதிகாலை வேலைக்கு செல்லாமல் மது கடை சென்று குடிப்பதால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. அதிகாலை முதலே சட்டவிரோதமாக நடைபெறும் மதுபானம் விற்பனனயை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வீடியோ லிங்
மேலும் சட்டவிரோதமாக ஒரு கோட்டர் விலை அதிகபட்சமாக 70 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது ஒரு குவாட்டர் வாங்கினால் சைடிஷ் மற்றும் தண்ணீர் ஃப்ரீயாக தருகின்றனர். தமிழக அரசு டாஸ்மாக் கடை 12 மணிக்கு திறக்க வேண்டும் என்று விதிமுறையை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த பகுதியில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதில் போலி மதுபானம் விற்பனை அமோகமாக விற்கப்படுகிறது.
வீடியோ லிங்
சாலையோரம் காலையில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் குடிகார ஆசாமிகள் தவறாக நடந்து கொள்வதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்தி சட்டவிரோத மது விற்பனை தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
-பிரபு பத்மநாபன்