பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பறையர் சாதியினர் – ஒரு பார்வை !
தமிழகத்தில் பட்டியலின சாதியினரில், குறிப்பிடத்தகுந்த சாதியனராக கருதப்படும் பறையர் சாதியிலிருந்து, எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான வேட்பாளர்கள் பறையர் சாதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
முதலிடத்தில், நாம் தமிழர் கட்சி 32 பேருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், 7 பேரை பொதுத்தொகுதியில் நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய செய்தி.
இரண்டாவது இடத்தில், நடிகர் விஜயின் த.வெ.க. சார்பில், 29 பேர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், ஒரு பொதுத்தொகுதியும் அடங்கும். இதில், திருவிக – பல்லவி ; மதுராந்தகம் – எழில் கேத்ரின் (மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில் மலையின் மகள்); கெங்கவல்லி சுஜாதா ; அவிநாசி – கமலி ஆகிய 4 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவது இடத்தில், அதிமுக- 23 பேருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதில் 8 பேர் புதுமுகம். இதில், மதுராந்தகம் – மரகதம் குமரவேல் Ex. Mla; குடியாத்தம் – ஜி பரிதா ; சீர்காழி – பிவி பாரதி Ex. Mla ; வந்தவாசி – பி. ராணி (புதுமுக வேட்பாளர் ) ஆகிய 4 பெண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
நான்காவது இடத்தில், திமுக சார்பில் 23 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 6 பேர் புதுமுக வேட்பாளர்கள். இதில், மதுராந்தகம் – அமலு பொன்மலர் ; கே வி குப்பம் – டாக்டர் ராஜேஸ்வரி மோகன காந்தி; பெரம்பலூர் ஜெயலட்சுமி கருணாகரன் ஆகிய மூன்று பேருமே புதுமுக பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.