நானெல்லாம் சாகித்திய விருது வாங்கும்போது நீங்கள் ஆட்சியிலேயே இருக்க மாட்டீர்கள் !
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் எனக்கு அறிவித்த ‘சக்தி விருதில்’ அதா* னி முதன்மை நன்கொடையாளர் என்பதை அறிந்து, அவ்விருதை பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.
அப்போது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறையால் நான் விசாரிக்கப்பட்டேன். விருதை ஏன் மறுத்தீர்கள்? எவ்வளவு ஆண்டுகளாய் எழுதுகிறீர்கள்? என்னென்ன எழுதியிருக்கிறீர்கள்? எத்தனைப் புத்தகம் எழுதியிருக்கிறீர்கள்? எதைப் பற்றி எழுதுகிறீர்கள்? புத்தகங்களை எங்களுக்கு அனுப்ப முடியுமா? என நிறைய கேள்விகள்..
நான் அச்சப்படாமல் முதலில் கேட்ட கேள்வி.அதா*நிக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு? அவர் என்ன அமைச்சரா? எம் பியா? அவர் நன்கொடை அளிக்கும் விருதை நான் மறுத்தால், அரசு ஏன் என்னை விசாரிக்க வேண்டும்?
இரண்டாவது, ஒரு விருதை ஏற்பதற்கு எனக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பதைப் போலவே, அதை வேண்டாமென்று நிராகரிக்கவும் உரிமையும் சுதந்திரமும் எனக்கு இருக்கிறது. இது என் உரிமையைப் பறிக்கும் செயல் அல்லவா?
மூன்றாவது, நான் எழுதிய புத்தகங்கள் என்னிடம் கையிருப்பு இல்லை.உங்களுக்கு வேண்டுமானால்,பதிப்பகம் தொடர்பு எண் தருகிறேன். புத்தகங்களை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்.
தற்போது ஒன்றிய அரசு, சாகித்திய அகாடெமி விருதை அளித்தால், அதைத் திரும்ப அளிக்க மாட்டேன் என்று எழுத்தாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டுமாம்.
நானெல்லாம் சாகித்திய விருது வாங்கும்போது நீங்கள் ஆட்சியிலேயே இருக்க மாட்டீர்கள். எனவே நான் நிச்சயம் சாகித்திய அகாடெமி விருது வாங்கிக் கொள்வேன். 🙂
– சுகிர்தராணி