திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… மு.க.அழகிரி தர்பார்!

0

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… மு.க.அழகிரி தர்பார்!

ஹாட்டா (ம) துரை நியூஸோட வந்திருக்கேன்னு ஆட்டத்தோடு வந்தமர்ந்தார் நம்ம ’ஸ்பை’டர்மேன். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தோட திறப்புவிழா அழைப்பிதழ்ல எம்.பி. சு.வெங்கடேசன் பெயரும், எம்.எல்.ஏ. கோ.தளபதி பெயரும் விடுபட்டு போச்சு அதானே. அட அது ஓல்டு நியூஸ். இது கோல்டு நியூஸ். அப்படி என்னதான்யா நியூஸ் சொல்லி தொலையும்.
மதுரையில திரும்பவும் ’அ’னா ஆட்டம் ஆரம்பம் ஆகப்போகுதுல்ல… அத சொன்னோம். ஜூலை&-09 தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் விழா. மகன், மகள், பேரன் பேத்திங்கனு குடும்பம் சகிதமா, கலைஞர் இல்லம் விழாக் கோலத்துல இருந்துச்சி. விழாவோட ஹைலைட்டே, அழகிரி வந்ததுதான். ஸ்டாலின் முதல்வரா ஆனதுக்குப்புறம் முதல் முறையாக ரெண்டு பேரும் சந்திச்சிருக்காங்க.

https://businesstrichy.com/the-royal-mahal/

மனைவியோட மகள பார்க்க, அமெரிக்கா போயிட்டு வந்த அழகிரி, முதல்நாள் நடுசாமத்துல சென்னை விமான நிலையத்தில வந்து இறங்கியிருக்காரு. இவ்வளவு தூரம் வந்துட்ட, கொஞ்ச நேரத்துல விடிஞ்சுரும் அப்படியே, அம்மா பிறந்தநாளை கொண்டாடிட்டு போயிடலாம்னேனு பாசமலர் பாசத்தை பொழிய. தங்கையின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்த ‘அ’னா, நேரா கோபாலபுரம் வண்டியை கிளப்பிட்டாரு. குசலம் விசாரிச்சது, கேக் வெட்டினது, தடல்புடல் விருந்தெல்லாம் முடிச்சிட்டு புதுத்தெம்போட நேரா மதுரைக்கு கிளம்பியிருக்காரு.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பிறந்தநாள்விழா முடிஞ்சு, குடும்பம் சகிதமாக நடந்த பேச்சுவார்த்தையில, ‘அ’னா மகனுக்கு எம்.பி. பதவியை கொடுத்து அழகு பார்க்கிறதுனும். விடியல் தரப்போறோம்னு சொல்லி, மக்களுக்கு நல்லத் திட்டங்களை கொடுக்கனும்ற முடிவோட, அப்பாவோட பேருக்கும் புகழுக்கும் களங்கம் வராத அளவுக்கு ஆட்சி நடத்தனும்னு நினைக்கிற தம்பிக்கு குடைச்சல் கொடுக்காம அரசியல் பண்ணனும்னு அன்புக் கட்டளையோட அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாராம். அடுத்து, மதுரையில என்ன ஆகப்போகுதுனு இப்பவே, கதி கலங்கிக்கிடக்காம். ஆல்ரெடி, ‘அ’னா பக்கம் இருந்துட்டு, நடுவுல தம்பி பக்கமா போயிட்டு பசையுள்ள பதவியில இருக்க ஆளுகளுக்கு அல்லு விடலயாம்.

அதுசரி, ரொம்ப வருசத்துக்கு அப்புறம், அண்ணன், தம்பி சந்திச்சுகிட்டாங்களே, அந்த பழைய சண்டையெல்லாம் சமாதானம் ஆயிடுச்சானு பத்திரிகையாளர் ஒருத்தரு கேட்க.
சண்டையா, எங்களுக்குள்ள எப்போ சண்டை நடந்துச்சு? சமாதானம் ஆவதற்கு? போவியானு உதயநிதி காமெடி செஞ்சுவிட, அச்சச்சோ, “அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்து அண்ணனை தூக்கினாங்களே அது என்னாச்சுனு கேட்காம வந்துட்டமே”னு வெளிய வந்து புலம்பிட்டிருக்காங்களாம்.

வீடியோ லிங்:

–  ஸ்பைடர்மேன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.