அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை – நீதிபதி அதிர்ச்சி !!!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை …

பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதி அதிர்ச்சி- எட்டாம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு என அஜித்குமார் வழக்கு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி ….

Sri Kumaran Mini HAll Trichy

காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் பேசுகையில் …

திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் சிறப்பு வனத்தில் பணி செய்கின்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு எல்லோரும் மனு தாக்கல் செய்தோம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தற்போது நான் அனைவரின் சார்பாக பேசுகின்றேன் அனைத்து வாதாடிய வழக்கறிஞர்கள் சார்பில் நான் பேசுகின்றேன்

லாக் அப் டெத்நீதியரசர் அவர்கள் 27ஆம் தேதி நடந்த சம்பவம் அந்த அம்மையார் உடைய நகை காணாமல் போனது அவர்கள் அஜித்தை சந்தேகப்பட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அந்த புகாருக்கு 27ஆம் தேதி ரசீது மட்டும் கொடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

28ஆம் தேதி காலை 10:30 மணிக்குத்தான் நகை காணாமல் போனது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்

ஆகவே எஃப் ஐ ஆர் பதிவு செய்வதற்கு முன்பே மானாமதுரை டி.எஸ்.பி அவர்கள் தலைமையில் செயல்படுகின்ற ஒரு தலைமை காவலர் மட்டும் அதனை சிறப்பு குழுவிடம் எஃப் ஐ ஆர் இல்லாத நேரத்தில் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு குழு அஜித்தையும் பின்னர் இரவில் அருணையும் மற்றவர்களையும் அவர்களது தம்பி நவீன் ஆகியோரை காவலில் இரவு முழுவதும் 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி விடியற்காலை நாள் முழுவதும் திருப்புவனத்தை சுற்றி இருக்கக்கூடிய நான்கு பகுதிகளுக்கு கூட்டிச் சென்று மிகக் கொடூரமாக சித்தரவதை நடத்தினார்கள் என்பதை நீதிபதி கேட்டு ஆவேசப்பட்டு வருத்தப்பட்டு தன்னுடைய ஆணையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் லாக் அப் மரணம்; போலீசார் பிரம்பால் தாக்கும் அதிர்ச்சி வீடியோஇறுதியாக மடப்புரம் கோவில் பின்பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு மாட்டுத் தொழுவத்தில் இறுதியாக அஜித்குமாரை அழைத்துச் சென்று நீங்கள் எடுத்து வைத்திருக்க கூடிய அந்த நகைகளை 10 சவரன் நகைகளை எங்கே என்று கேட்டு அங்கே இருக்கக்கூடிய பொருட்களை புரட்டிப் பார்த்து அங்கே எதுவும் இல்லை கிடைக்கவில்லை என்று அவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அவரது கண்களிலும் வாயிலும் மிளகாய் பொடியை போட்டு இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு இருக்கிறோம்.

அதை நேரடியாக பார்த்து கோவில் அருகே பணியாற்றக்கூடிய  சத்தீஸ்வரன் என்கின்ற இளைஞர் கழிவரையிலிருந்து ஒரு 15 முதல் 30 வினாடிகளுக்குள் இருக்கக்கூடிய வீடியோவை பொறுப்புடன் வழக்கறிஞர்களிடம் கொடுத்து நீதிமன்றத்தில் இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் நீதிமன்றம் அங்கே நடந்த சம்பவத்தை பார்க்க முடிந்தது இது போக அங்கு இருக்கக்கூடிய அதாவது சம்பவம் நடந்த இடத்தில் இருக்கக்கூடிய கம்புகள் உள்ளிட்டவைகள் புகைப்படமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் தரப்பில் அவர்கள் தெரிவித்தது காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராவை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.

Flats in Trichy for Sale

ஆனால் கோவிலில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை அளிக்கப்பட வேண்டும் என்கின்ற காரணத்தினால் 29ஆம் தேதி காலையில் ராமச்சந்திரன் என்கின்ற சார்பு ஆய்வாளர்  அங்கே நேரில் சென்று எந்த ஒரு விளக்கமும் எழுத்துப்பூர்வ அறிக்கையும் கொடுக்காமல் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்த ஹார்ட் டிஸ்கை எடுத்துச் செல்லப்பெற்றார் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான காவலர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds ...அதை நாங்களும் கூறியிருக்கின்றோம். அதன் பிறகு நீதி அரசர் அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு பிரேத பரிசோதனை சான்றிதழ் டீன் கொண்டுவரவில்லை கொடுக்கவில்லை என்கின்ற புகாரின் காரணத்தினால் அவரை வரவழைத்து அவரிடம் இருந்து முதற்கட்ட பிரேத பரிசோதனை(sealed cover) அறிக்கையை வாங்கி அதில் 44 கொடூர காயங்கள் இருக்கின்றது என்பதை குறிப்பிட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு காயங்கள் இருக்கின்றதா? என்பதை நீதியரசர் குறிப்பிட்டார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

இறுதியாக தன்னுடைய அரசு தரப்பு முழுமையாக இது வந்து நடக்க கூடாத ஒரு சித்திரவதை ஒரு வன்முறை என்று அரசு ஏற்றுக்கொள்கிறது என்று பொறுப்புடன் அரசு கூறியது என்பதை இங்கே கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

இறுதியில் நீதிமன்றத்துடைய ஆணை என்னவென்றால் மதுரை நான்காவது கூடுதல் செசன்ஸ் ஜான் சுந்தர்லால் சுரேஷ் அவரை என்கொயரி ஆபிஸர் விசாரணை அலுவலராக நியமனம் செய்து அவரிடம் அனைத்து சாட்சியங்கள் மற்றும் பொருட்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

அவர் ஆய்வு செய்து எட்டாம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு தன்னுடைய அறிக்கையை முழுமையாக அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணையை அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

லாக் அப் டெத்அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை தொடரும் என்று கூறி அதே தேதிக்கு முன் அவர்கள் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சாட்சிகளை யாரும் மிரட்டக்கூடாது அவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்யக் கூடாது என்பதை கூறி அரசு இன்னும் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். குறிப்பிட்டு பேசும்போது ஏ டி எஸ் பி அந்த கோவில் பின் வாசலில் இருக்கக்கூடிய பகுதியில் இருந்த அனைத்து பொருட்கள் எல்லாம் அவரே ஒரு பையில் எடுத்துச் சென்று விட்டார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில் உயர் அதிகாரிகள் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மானாமதுரை பகுதியில் இருக்கக்கூடிய டிஎஸ்பிஐ பிற்பகலில் நாங்கள் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீதிமன்றம் அதிகமான செயல்பாடுகளை அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று வழக்கை முடித்து இருக்கிறார்கள்.

அவர் ஒரு என்குயரி ஆபிசர் என்றுதான் அவர் கூறியிருக்கிறார் என்பதை நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

மேஜிஸ்ட்ரேட் அறிக்கையை நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறார்கள் அதனால் எங்களுக்கு அது வரவில்லை அது அவர்கள் சார்ந்த விஷயம் எல்லோருக்கும் என்னுடைய நிலைப்பாடு என்னவென்று தெரியும் நீதிமன்றத்தில் நடத்த விஷயம் குறித்து பேசுகின்றோம் எனவே என்னுடைய தனிப்பட்ட கருத்தை நான் சொல்லுவது சரியாக இருக்கிறது நீதிமன்றத்தில் நடந்த விஷயங்களை தான் உங்களுடன் பகிர்வது சரியாக இருக்கும். தனிப்பட்ட விதமாக நாங்கள் கேட்டிருந்தது எஸ்பி தலைமையில் இருக்கக்கூடிய சிபிசிஐடி என்கொயரி நாங்கள் கேட்டிருக்கிறோம் அது கொடுப்பார்களா இல்லை தமிழக அரசு சொல்லுகிறதா என்பது அரசை பொறுத்திருக்கிறது நீதிமன்றத்தை பொறுத்திருக்கிறது வரும் வாய்தாவில் சந்திப்போம் என்றார்.

 

—   ஷாகுல் , படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.