துல்கர் சல்மானின் படத்தை ரிலீஸ் பண்ணும் ஏஜிஎஸ்!
மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களின் சென்சேஷனல் ஹீரோ துல்கர் சல்மானின் ‘வேஃபேரர் பிலிம்ஸ்’ தயாரிப்பில் டொமினிக் அருண் டைரக்ஷனில் உருவாகி, வரும் ஓணம் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘லோகா சேப்டர்-1 சந்திரா’. சூப்பர் ஹீரோ சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பாகமான இதில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சந்தூ சலீம் குமார், அருண் சூரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர்கள் ; ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, இசை : ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங் :சாமன் சாக்கோ, ஆர்ட் டைரக்டர் : ஜிது செபஸ்டியான், ஸ்டண்ட் : யானிக் பென், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
மலையாள சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் தென்னிந்தியா முழுவதும் அந்தந்த மொழிகளில் ரிலீசாகிறது. இதில் தமிழ்நாட்டின் ரிலீஸ் உரிமையை இங்குள்ள பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் வாங்கியுள்ளது.
— மதுரை மாறன்